மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

ஆட்டோகிராப்....:::நாகராஜன்:::

ஆட்டோகிராப்....

பள்ளியின் இறுதி நாட்கள்
துள்ளலின் பருவ முடிவில்
பாடம் படித்த இடம்
மறக்குமோ என நினைக்கையில்...

இல்லை... அதுவரை கூடப்
படித்தவனை மட்டுமே அறிந்து
பிரியும் ஏக்கம் தாளாமல்
வரிகளில் துக்கம் அடக்கவோ...

அடுத்த பெஞ்சில் அமர்ந்தவள்
ஒருவேளை ஐ லவ் யூ எழுதி
காதலை சொல்வாளோ
என எதிர் பார்த்தோ....

எதுவோ ஒன்று… ஆனால் என்ன?....
கையில் அடக்கமாய் குறு நோட்டை
பல வண்ணத் தாள்களை ஒன்றொன்றாய்
ஓடிச்சென்று நிரப்பிய நினைவுகள்...

தெரியாமல் விரல் தொட்ட லலிதா
தப்பு கணக்கிற்காய் குட்டிய வாத்தி
விளையாட்டில் அடித்த சக மாணவன்
மணி அடிக்கும் பியூன் முனுசாமி ....

இன்னும் எத்தனையோ பேர்
நாலு வரிகள் எழுதிக் கொடுத்தது...
எதையோ பரணிலிருந்து இழுத்து
எடுக்கையில் தலைமேல் விழுந்தது....

பக்கம் புரட்டுகையில் எல்லார்
நினைவும் ஊர்ந்து போனது….
ஒரொரு பக்கமும் நினைவெல்லாம்
இனித்து நிகழ் காலம் மறந்தது...

கோவிலிலிருந்து அவசரமாய்
உள்ளே வந்த மனைவி குங்குமம்
சுற்ற ஒரு தாளைக் கிழிக்கையில்
என் இதயமும் கிழிந்தது...

:::நாகராஜன்:::

பிராமணன்....:::நாகராஜன்:::

பிராமணன்....

தலை மழித்து பின்னில் ஒரு
கற்றை மயிர் மட்டும் முடிச்சுடன்
மாரில் குறுக்காய் முப்புரி நூல்
இடையில் குறுக்கு கட்டி வேட்டி....

கையில் செம்புடன் காலை நேரம்
ஆற்றில் குளியலும் சூர்ய வந்தனமும்
மதியம் சந்தியைக்கு மீண்டும் தொழலும்
காயத்ரி மந்திரம் நூறு முறையேனும்....

இடைப்பட்ட வேளையில் கையில்
வாத்தியத்துடன் உஞ்ச விருத்தி
இல்லை கோவில் கருவறையில்
கடவுளோடு சமஸ்கிருதக் கொஞ்சல்...

வெளியே பக்தனுக்கு மேலிருந்து
பிரசாதம் எறிதல் அல்லது
வேலையில்லாதபோது பத்தாவது
பிள்ளையை உருவாக்குதல்....

தட்டில் விழும் காசிற்க்காய் கூடுதல்
மந்திரம் சொலல், இல்லையேல்
அமாவாசை, தர்ப்பணத்தி்ற்கு கால் கழுவி
வாழையும் அரிசியும் பிதுர் யாசகம் பெற்று…

பிராமணனுக்குத் தெரியாமல் போனது
வேறெந்த வேலையும் வாழ்வியலும்...
வியாபாரம் தெரியாது விளம்பரம்
தெரியாது அரசியல் தெரியாது....

காலம் மாறி கலி முற்றுகையில்
பிராமணன் வாயில் பீடியும் பிஸ்ஸாவும்
அமெரிக்க வாசம் மென்தொழில், நுனி நாக்கில்
சமஸ்கிருதம் மாறி அன்னிய மொழி....

வறுமை விரட்டுகையில் கைவசம்
சமையல் தொழில், இல்லையேல்
சேட்டு வீட்டு கணக்குப் பிள்ளை
வஞ்சனையில்லாத உழைப்புடன் ...

வாங்கும் சம்பளத்திற்கு நன்றியோடு
பணிசெய்யும் க்ருஷ்ண தர்மம்....
தொழில் பயம் பக்தி எல்லாம் இருக்கும்
மோசம் செய்ய ஒருபோதும் எண்ணமில்லை

அரசாங்கம் பிராமணனுக்கு ஒன்றும்
செய்யாது.... சில நேரம் வசவும்
சில நேரம் செருப்பு மாலையும்
சில நேரம் பூணுல் அறுத்தலும்....

எந்த ஜாதியிலும் பிராமணன் இல்லை
உயர் குடி, தாழ் குடி இல்லை
இட ஒதுக்கீடு இல்லை வறுமையை
கண்டுகொள்வாரில்லை அரசாங்கத்தில்

வெறுக்கப் படுவோமோ என்று பயந்து
பூணுல் மறைத்தவனை கண்டதுண்டு...
ஆனாலும் தெருவில் பிச்சை எடுக்கும்
பிராமணனை நான் பார்த்ததில்லை...

வேறெந்த வேலையும் தெரியாத
பிராமணன் செய்வது தற்காலம் எல்லா வேலையும்…
வியாபாரம் விளம்பரம் அரசியல் எல்லாம்...
பிராமணன் பணியினை தமிழ் ஓதுவான் செய்யலாச்சு ....

ஆனாலும் இன்னும் எனக்கொரு சந்தேகம்
கடவுளுக்கும் பிராமணனுக்கும் மட்டுமே
புரியும் சமஸ்கிருத பாஷையில் பக்தன் குறையை
இனி யார் கடவுளுக்கு புரிய வைப்பார் ?

:::நாகராஜன்:::

பட்டாளத்தான்... :::நாகராஜன்:::

பட்டாளத்தான்...

விரித்த மீசையும் காக்கி உடுப்பிலும்
கையில் இரட்டைக்குழல் துப்பாக்கியும்
எண்பது கிலோ தகர டப்பவோடும்
ரயில் இறக்கியது சுபேதார் சண்முகத்தை…

கிராமம் முழுதும் அதிசயித்தது…
வீறாப்பெல்லாம் பேசினார் பட்டாளத்தார்…
பாகிஸ்தானியை சுட்ட கதையெல்லாம்
சுவாரஸ்யமாய் சொன்னார் ....

ஹிமாச்சலின் குளிரும் பூஜின் மணலும்
விவரித்தபோது கூட்டம் மொத்தம்
சிலிர்த்துப் போனது,மயிரெல்லாம் கூச்சி
நரம்பிலெல்லாம் மின்சாரம் ஊர்ந்தது ...

பட்டாளத்தான் துப்பாக்கிக்குப் பயந்து
யாரும் சொல்லவில்லை அவன்
பெண்சாதியும் முன்சீப்பும் வருமுன்
கூடிக் குலாவியதை....

::::நாகராஜன்:::

சிதம்பரம்.... :::நாகராஜன்:::

சிதம்பரம்....

நடுக்கில் முளைத்த கோவில் சுவரில்
காவியும் வெளுப்பும் வர்ணமாய்
சுற்றிலும் மாட வீதிகள், முழுவதும்
அந்தணர்களும் அம்மாமிகளும் ...
மற்றவர் நுழையத்தடை....

ஆனாலும் பாலுக்கும் காய்க்கும்
சாக்கடை கழுவவும் ஜாதியின்றி
யாவர்க்கும் உண்டு அனுமதி...
கோவிலில் சில்லறையைக் கழுவாமல்
மடியில் சுருட்டும் குடுமி பிராம்மணன்....

சித்திரையோ பங்குனியோ
கண்டிப்பாய் ஒரு பண்டிகை….
பிராமணன் பிழைக்க வேண்டாமா?
உற்சவர் வீதியில் உலா வருதலும்
மற்றவர் சாமிக்கு தேங்காய் உடைத்தலும்....

ரத சப்தமியோ இல்லை ஆருர்தோடு
தரிசனமோ இல்லை பங்குனி
உத்திரமோ இல்லை சிவா ராத்திரியோ
ஏதும் இல்லை என்றால் இருக்கவே
இருக்கு நந்திப் பிரதோஷம்...

எத்தனை இருந்து என்ன?
ஈசனை தமிழில் துதிக்க நமக்கு
கோர்ட்டின் அனுமதி வேண்டியிருக்கு...
அல்லது தலித்தின் தோளேறிப் போராட
ஒரு முதிவனும் தமிழக அரசின்
பென்ஷன் திட்டத்தில் ஒரு வயதான
தருமபுர ஆதீன சிவ பக்தனும்....

:::நாகராஜன்:::

பயம்....:::நாகராஜன்:::

பயம்....

பகலில் ஒரு தொல்லையுமில்லை!
பேயோ பிசாசோ முனியோ சனியோ
வாய்க்கு வந்ததை வெளியில் சொல்லி
தைரியவான் ஆகலாம்...
ஆனாலும் சந்தை முடிந்து
மிச்சம் கட்டி சுவேகாவில்
ராத்திரி பத்திற்கு வீடு
திரும்புகையில் இருட்டில்
தெரியும் நிழலும் தூரத்து
லாந்தர் விளக்கும் உறங்காமல்
கத்தும் மரத்தும்பிகளும்...
சப்தம் போடும் மின் கம்பிகளும் ....
பேச்சு துணைக்கேனும் யாரும்
வருவாரோ என்று நினைக்கையில்
அதிகம் பேசினோமோ என்று
தோன்றுதலை தடுக்க முடியவில்லை...

:::நாகராஜன்:::

முனி .... :::நாகராஜன்::::

முனி ....

மூணாம் கிளாஸ் முருகேசனை
முனி அடித்ததை ஊரே பேசியது!
காப்பு கட்டணும் என்றது ஒரு சாரார்
ஆனைமுடி அவசியம் என்றாள்
பூனை மீசை கன்னியம்மா ….
முனியப்ப சாமிக்கு நேரணும்
முன்சீப்பு ராமசாமி சொன்னது …
புளியமரத்தில் ஆணி அடிக்க
மரமேறி நாடான் சொன்னான் ….
முருகேசன் முகத்தில் பயம் பார்த்து
நிச்சயம் போன மாசம் தூக்கில்
தொங்கிய அருக்காணிதான் என்று
அடித்து சொன்னார் கிராமத்து மணியகார் ….
யாரும் சொல்லவில்லை முருகேசனும்
சொல்லவில்லை எந்த முனிஎன்று...
ஆனாலும் நிறுத்தவில்லை
வேலிக்குள் புணர்தலை
யாருக்கும் தெரியாமல்...
தலையாரியும் தாயம்மாவும்.....

:::நாகராஜன்:::

நாளை மரணம்....

நாளை மரணம்....

சேமித்ததெல்லாம் மனைவியிடம் சொல்லியாச்சு..
வரும் கடன் வராக்கடன் வாங்கிய கடன்
எல்லாம் மகன் மகளிடம் தெரிவித்தாச்சு..
ஏ டி எம் அட்டை பின் நெம்பர் கொடுத்தாச்சு
பேங்க் அக்கௌன்ட் EOS மாத்தியாச்சு
இன்சூரன்ஸ் தொகை அதிகப் படுத்தியாச்சு
பர்சில் உள்ள காசை பிச்சை போட்டாச்சு
பத்து வெள்ளை தாளில் கையெழுத்திட்டு
பையன் கையில் கொடுத்தாச்சு...
இனி ஏதும் பாக்கியில்லை செய்ய...
ஆனாலும் சாகத்தான் வேண்டுமா?

::::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

கட்டுண்டு காவலுண்டு கையது பொத்தி மெய்யது அடங்க
பட்டுண்டு வாழ்வர் கண்டீர் - பெற்றது தண்டனையாய்
கூட்டில் வாழ்தலும் வழக்காய் மாறாது காண் கல்யாணம்
கட்டியவனும் கொட்டிலில் கைதியும்

:::நாகராஜன்:::

அன்பு நண்பர் திரு. கோவிந்தன் அவர்களுக்கு
தாங்கள் கேட்டபடி திரு. சீவரத்தினதிற்காக ஒரு சிலேடைக்கவிதை.
நன்றி


:::நாகராஜன்:::

காதல்....::::நாகராஜன்:::

காதல்

நீயே நானானதால் நானே நீயானதால்
நான் அங்கிருக்கிறேன் நீ இங்கிருக்கிறாய்
இடம் மாறுதல் பிழையல்ல பெண்ணே...
மாறாவிட்டால் இல்லை காதல் கண்ணே...

உறக்கத்திலும் உன்னை உணர்வேன் நீ
விழிக்காமலிருக்க நான் விழித்திருப்பேன்
உடல் வசமிழந்து தளர்கையில் நாளை
முடிந்தால் செய்வோம் என்பதிலிருக்கிறது காதல்..

தொடுவதில் படுவதில் உராய்வதில் இல்லை காதல்
கட்டுடல் தசைப் பிடிப்பு கவர்ச்சி வேண்டாம் காதலில்
எனக்கொரு தொல்லைஎனில் உன் கண் உகுக்கும்
என் தொல்லை உன்னிடம் சொல்லாமல் போகுமது காதல்

நாடி தளர்த்து நடை பிசகையில் துணையாய் வரும் உன் கை
ஆடி முடித்த நாட்களை அசை போடுகையில் உடன் உன் துணை
கிடக்கும் முன் நாளை பார்ப்போம் என்பதில் உண்டு காதல்
விதவையாய் நினைவுகளுடன் போராடித் தோற்பதில் உண்டு காதல்

:::நாகராஜன்:::

மந்திரமாவதும் நீரே மண்ணாவதும் நீரே.....

மந்திரமாவதும் நீரே மண்ணாவதும் நீரே.....

மண்ணை மண்ணால் சுத்தமாக்கி
மண்ணால் நீரை சுத்தமாக்கி
நீரை நீரால் சுத்தமாக்கி
நீரால் மண்ணை சுத்தமாக்கி....

(The process of cleaning iron using sand - sand blasting
The process of removing suspended solids from water – Sand Filtration
The process of making pure water from sea water – Reverse Osmosis
The process of cleaning the silica ores using water – Washing
-The engineering process of removal of foreign materials)


அழுத்தத்தால் கரியை எண்ணையாக்கி
தீயால் எண்ணையை வெப்பமாக்கி
வெப்பத்தால் சக்தியை சக்கரத்திலிட்டு
உந்திப் போகும் உத்தியைத் தந்து....

(pressure creates organic carbonaceous petroleum oil
Fire ignites the petrol and heats up or expands gas
Heat energy converted to torque and transferred to gears
Gears connected to wheel renders motion
- The mechanism of automotive machines)

மண்ணில் தனிமம் வேகுவதும் தீயால்
வெந்தது குளிர்ந்ததும் காற்றால்
வந்தது வடிவானது வெளியால்
வெளியில் வந்ததை வளியில் நிறுத்தி..

(ores from soil are melted with fire
Melted metal is cooled by air
The moulded stuff is used as a structure
For launching the rockets
- The science of metal moulding)

ஒளியைக் கடத்த காற்று ஓர் ஊடகம்
ஒலியைக் கடத்தவும் காற்று ஓர் ஊடகம்
வளியே ஒரு ஊடகம் ஆகும்
வெளியே புலன் அறியாமல் போகும்...

(light is transmitted via the air particles
Sound is transmitted by ether in air
Atmosphere is the media of transmission of light and sound
Transmission of these powers never are visible
- the science of sound and light transmission)

மின்னில் உண்டு சூடும் தணிப்பும்
மின்னில் உண்டு காற்றும் மண்ணும்
தீயே குளிரை மாறும் வித்தை
குளிரே தீயாய் மாறும் விந்தை

(light produces heat and cold
Heat produces wind and metal fusion
Heat converts itself to cold
Cold itself is a form of heat
- Thermodynamics)

எல்லாம் உனது என்பதை அறிவேன்
தீயும் நீ மண்ணும் நீ காற்றும் நீ
நீரும் நீ வளியும் நீ எங்கும் எதிலும் நீ
நான் எனது என்றில்லாமல் நீ உனது என்றானதால்

ஒன்றிலிருந்தே மற்றது வருமென்பது விதி
ஒன்றை மாற்றினாலே மற்றதாகும்
ஒன்றை அழித்தாலே மற்றது உருவாகும்
ஒன்று என்பதே நீயாய் உனதாய் இருக்கையில்


:::நாகராஜன்:::

சீதைக்கு ராமன் சித்தப்பா!


சீதைக்கு ராமன் சித்தப்பா!

ராமனுக்கு மருமகன் முருகன், முருகனின் முதல் மனைவி
இந்திரன் பெண் தேவயானி, அவளோ சரஸ்வதியின் மருமகள்,
பிரம்மனின் பெண் பூமாதேவி ராமனுக்கு அண்ணன்
மகள் என்றால், சீதைக்கு ராமன் சித்தப்பாதானே ?

:::நாகராஜன்:::

25 மார்., 2008


தலைப்புகூட வேண்டுமா?

எம்ஜியார் நம்பியார் என்டியார்
சிவாஜி பாலாஜி சாயாஜி
ரஜினி நளினி பரணி
விசித்ரா சுசித்ரா சுமித்ரா

வனிதா சரிதா வினிதா
சுஜிதா சாஜிதா சுஜாதா
ராதிகா ஜோதிகா தேவிகா
பூமிகா சரிகா கோபிகா

அஜய் விஜய் ஜெய்
அஜீத் சஜித் சுஜித்
சுரேஷ் ரமேஷ் உமேஷ்
நாகேஷ் ராஜேஷ் லோகேஷ்

அகல்யா சரண்யா சுகன்யா
சுஷ்மிதா மதுமிதா மம்தா

நமீதா ஸ்மீதா ஸ்ரீஜா பூஜா
வாணிஸ்ரீ ராஜஸ்ரீ பாக்யஸ்ரீ

தங்கர் சங்கர் ரவீந்தர்
பாலசந்தர் ரவிச்சந்தர் சரத்சந்தர்
சந்திரகலா சூர்யகலா மேகலா
அருண் வருண் தருண்

அமலா விமலா கமலா
வனஜா ஜலஜா கிரிஜா
ரஜினிகாந்த் நளினிகாந்த் விஜயகாந்த்
சுந்தராஜன் சௌந்தராஜன் ராமராஜன்

சரோஜா ரோஜா ஹாஜா
யுவராணி கலைவாணி கல்யாணி
முரளி சுருளி சார்லி
கலா நிலா கஜாலா

வசந்த் சுமந்த் நிஷாந்த்
சிவகுமார் சுகுமார் விஜயகுமார்
ரவிக்குமார் சரத்குமார் சக்திகுமார்
அசின் சிம்ரன் சுஹாசினி
நதியா காவ்யா பாக்யா

பாரதிராஜா பாக்கியாரஜா பாண்டியராஜா
ராஜ்கிரண் உதய்கிரண் கிரண்
விவேக் விக்ரம் விஷ்ணு
சிங்காரம் சீனிவாசன் கமல்ஹாசன்

மனோகர் சுதாகர் பிரபாகர்
கவுண்டமணி போண்டாமணி
குள்ளமணி குண்டுமணி

மாதவன் ராகவன்
சந்திரன் இந்திரன்
தங்கவேலு வடிவேலு
ஐ ஆர் எஸ் ஏ ஆர் எஸ்

எஸ் எஸ் ஆர் டி ஆர்
பார்த்திபன் கார்த்திக்
கசன்கான் ரியாஸ்கான்
மோகன் ஜகன்

அஜீத் ரஞ்சித்
விஜய் பாபு சோபன் பாபு
த்ரிஷா உஷா
ஆஷா நிஷா

பாபிலோனா கல்பனா
சித்ரா உத்ரா
ஜெயஸ்ரீ சதிஸ்ரீ
கலாஸ்ரீ மாலாஸ்ரீ

சுபஸ்ரீ ஸ்ரீ
சாந்தி காந்தி
சுப்ரியா ஸ்ரீப்ரியா
லக்ஷ்மி மகாலக்ஷ்மி


ராஜேஸ்வரி புவனேஸ்வரி
சுப்பு லக்ஷ்மி ஜெயலக்ஷ்மி
சந்திரா வசுந்தரா
சுந்தர் சௌந்தர்
நாசர் ஈஸ்வர்

மதுபாலா விதுபாலா

மனோபாலா சிங்பாலா
மனோரமா பிரபாரமா

ரமா உமா சுமா

லதா சுதா சதா

விஜய்பாபு சரத்பாபு மதன்பாபு

தேவன் ராஜன்தேவன் மஹாதேவன்


அய்யயோ சாமி
ஆளை விடுங்கோ....

:::நாகராஜன்::::

இராமாயணம்....

இராமாயணம்

பத்துத் தேரோன் மகன் பத்தினிக்குப் பதியானவன் பத்தினியை
பத்துத் தலையன் பத்திஎடுத்து பறந்து போனான் - பத்தால்
அணையும் பத்தன் பத்த வைத்து போனபின் பத்தினியும் பதியும்
இணைந்ததைப் பத்தி பத்தியோடு சொன்னவன் பத்தன்


:::நாகராஜன்::::


இராமாயணம் - விளக்கம்

பத்துத் தேரோன் மகன் – தச (பத்து) ரதன் (தேரோன்) மகன்
பத்தினிக்குப் பதியானவன் - சீதைக்குக் கணவனான ராமன்
பத்தினியை பத்துத் தலையன் - சீதையை ராவணன்
பத்திஎடுத்து பறந்து போனான் - பற்றிஎடுத்து பறந்து போனான்
பத்தால் அணையும் பத்தன் - பற்றால் அணையும் பக்தன் ஹனுமான்
பத்த வைத்து போனபின் - வாளால் இலங்கையைப் பற்றவைத்து போனபின் பத்தினியும் பதியும் - ராமனும் சீதையும்
இணைந்ததைப் பத்தி - இணைந்ததைப் பற்றி
பத்தியோடு சொன்னவன் பத்தன் - பக்தியோடு சொன்னவன் பக்தன் வால்மீகி

சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்


சிலேடைக்கவிதை - கிறிஸ்துவும் கிருஷ்ணனும்

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
அன்னைக்குமரியாய் , கொட்டிலில் பிறப்பாய், இடையன் கையில்
கோலும், விரித்த சடையும், உள்ளமுள்ளும் அறப்போரில்
முன்னும் சீடர்கள் உடன் உணவருந்தி, இருவரும் ஒருவனே..

:::நாகராஜன்::;

விளக்கம்:

உரைத்ததெல்லாம் மறையானது, பாவம் சுமப்பது தானென்றது
வேதம் (மறை) உரைத்தது கண்ணனும் கிறிஸ்துவும்
கடமையை செய் பாவங்கள் நான் சுமக்கிறேன் என்றனர் இருவரும்

அன்னைக்குமரியாய்
அன்னை குமரி - கிறிஸ்துவின் தாய் மரியாள் கன்னியாவாள்
அன்னைக்கும் அரியாய் (தன் பிறப்பை தாய்க்கு வாயில் மண்ணுண்டு உலகம் காட்டியது கண்ணன்)

கொட்டிலில் பிறப்பாய்
ஒருவர் மாட்டுத் கொட்டிலிலும் மற்றவர் சிறைக் கொட்டிலிலும் உதித்தவர்கள்

இடையன் கையில் கோலும்
இருவரும் விலங்கு மேய்த்த இடையர்கள் - ஒருவர் ஆடும் மற்றவர் மாடும்
ஒருவர் கையில் கம்பெனும் கோலும் மற்றவர் கையில் குழல் எனும் கோலும்

விரித்த சடையும்,
நாம் காணும் இரு பிம்பங்களும் திருத்தா முடியுடன் இருபபதாய்க் காண்கிறோம்

உள்ளமுள்ளும்
ஆணி அடித்து சிலுவையில் அறைந்ததில் உள்ள முள் வடுக்களும் உடைய கிறிஸ்துவும்
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் அழகனுமான கண்ணன்

அறப்போரில் முன்னும்
படைத்தவன் பெருமை பேசி சரணகதம் செய்ய முன்னின்று புரட்சி செய்த ஏசு
பாண்டவர் போரில் சாரதியாய் முன் நின்றவன் கண்ணன்

சீடர்கள் உடன் உணவருந்தி,
சிறிய ரொட்டித்துண்டினை பகிர்ந்தளித்தவர் ஏசுபிரான்
தன்னுடன் இருந்த பொடியன்களுடன் வெண்ணெய் உண்டவன் கண்ணபிரான்

இருவரும் ஒருவனே..

எல்லாம் நீ சிவனே....

எல்லாம் நீ சிவனே....

கற்றாளை கற்றாழை எண்ணாது
கற்றாளின் நற்றாளைப் பற்றியால்
அற்றாளின் உற்றால் உண்டதால்
பெற்றாளின் உற்றது பொற்றாள்

வேசிதொட்டால் அறும்பற்றென
நீசனெனை பொருப்பற்றாக்கி
கடையில் உனை விருப்புற்றாக்கி
என்னென்பேன் எனை பற்றாக்கியதில்...

கெட்ட குடி தொட்டமுளை
அம்முட்ட நட்ட குழி
இம்முட்ட நீரிட்டலை நான்
அடித்தே தோற்பதென்னாளோ ?

இடைதடவி முலையருந்தி
பீக்குடல் மேலமர்ந்த்துருத்தி
புணர்ந்துணரும் சிற்றின்பக்
கழிவாயில் மறப்பதென்னாளோ ?

பட்டினத்து செட்டியைப்போல்
பலகொடுத்து நாயடியனை
நினைவெல்லாம் கசிந்துருக
செய்தவனை காண்பதென்னாளோ?

நூலில் ஊசிபோல நீரில் பாசிபோல
காசில் வேசிபோல காவில் தாசிபோல
காடேறும் உடலுடன் வாரா
பந்தம் அறுப்பது என்னாளோ ?

சீவனும் சிவனும் ஒன்றேயறி
உயிர் வேரறி வலியுடல் புறம் எறி
வரமும் வானமும் பெறவேன்றரி
உடல் ஒரு பழுதென்றேயறி


புழுத்து புழுதியில் போகுமுடல்
கரித்து எழுதீயில் வேகுமுடல்
இழுத்து சுழியில் போகுமுடல்
கழுத்தில் சுருக்கையில் போகுமுடல்

வாலறி வாலறு
பலனறி புலனறி
புரியும் அவனறி


வான் செயல் நாதன்
செயல்தானென்றறி

வாலறி புலனறி
பொறியறி புகலறி
வானறி விரியறி

கோளறி குறியறி
திரிமுனியறி
துணையறி பொறியே


மண்ணெடுத்து பசை கலந்து
எண்ணற்ற குழிசெய்து மண்ணை
தீயிட்டுப் பொசுக்கி கசடகற்றி
காற்றிட்டு கடினப்படுத்தி குழம்பினை
ஊற்றிட்டு வார்த்ததை நீரிட்டணைத்து
வானில் பறக்கவிட்ட ஞானமே
விஞ்ஞானமாம்....

மண்ணாய் தீயாய்
காற்றாய் நீராய்
வெளியாய் ஆகிய நீயே...

என்னை எடுத்து பற்று கலந்து
என்னில் மண்ணை நிறைத்து
சுட்டு ஊதி நீராட்டி வானில்
பறக்கவைத்து என்னில் உன்னை
உணர வைத்தது மெய்ஞானமா?

இல்லையெனில் ....

உன்னை உருக்கி வடித்து
உன்னை அறுத்து உன்னைக் கொண்டு
பொசுக்கி உன்னைக்கொண்டு வடித்து
நீயால் தணித்து உன் சக்தியை
உபயோகித்து நீயாய் நிற்கும்
காற்றை உருவாக்குதல் விஞ்ஞானமா?

நாதம் நீ பூதம் நீ
வேதம் நீ கீதம் நீ

அலையாய் சிலையாய்
அனலாய் கனலாய்
காற்றாய் ஊற்றாய்
அடியாய் முடியாய்
தளையாய் விளையாய்
தாயாய் தீயாய்
தந்தையாய் விந்தையாய்
ஒளியாய் ஒலியாய்
வழியாய் வளியாய்
மீனாய் மானாய்
மண்ணாய் விண்ணாய்
கண்ணாய் எண்ணாய்
அருளாய் பொருளாய்
மழையாய் விழையாய்
மதியாய் நதியாய்
விதியாய் கதியாய்
அரமாய் உரமாய்
மரமாய் சரமாய்

அகமாய் இகமாய்
ஏகமாய் ஊகமாய்
இணையாய் துணையாய்
அணையாய் கணையாய்

அணியாய் மணியாய்
கணியாய் தணியாய்
யாதுமாய் ஏதுமாய்
ஜோதியாய் வாதியாய்
ஆதியாய் நீதியாய்
எடுப்பதும் நீ அடுப்பதும் நீ
கொடுப்பதும் நீ தடுப்பதும் நீ

வரம் நீ கரம் நீ
புறம் நீ அறம் நீ

உன்னை எடுத்து உன்னை
வடித்து உன்னை பிரித்து
உன்னை வெட்டி உன்னை ஒட்டி
உன்னை அணைத்து உன்னை தகித்து
உன்னை வடிவாக்கி உன்னை கைமாற்றும்
வித்தை தந்தாய்

எல்லாம் நீ எதுவும் நீ
எதிலும் நீ எங்கும் நீ

நான் செய்யும் ஒரொரு பொருளிலும்
நீ தானென்று உணர்த்துகிறாய்

வான் பரந்து ஆளும் சிவனே
நான் என்பது நானல்ல
நீஎன்பதை உணர்ந்தேன் அல்லால்
நீ வடித்த இவ்வுடல் சிவனே
சிறிய நேரம் தங்கிடல் மட்டுமே
காற்று வாங்கி நீரடக்கி சிவனே
மண்ணுண்டு வெப்பம் சீராக்கி
உயிர் அடங்கும் கட்டிடத்தில்
தங்கிப் போகும் சிலநாளே...சிவனே

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

மூக்கணாங்கயிறுண்டு முகத்தில் பட்டமுண்டு அடிக்கடி
தலையசைக்கும் அடி வாங்கி தோல் தடிக்கும்
அனாவசியமாய் சிலிர்க்கும் உழைத்துதேயும் பாரம் சுமக்கும்
வினா கேட்காமல் எருமையும் அருமை மணவாளனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

அட்டை உள் அடங்கும், இரு பக்கமுண்டு, தெளிந்த நீரோடை
புரிதல் போலுண்டு, படித் துறையுண்டு, சிறுவர் தோள்
சேர்ந்து களிக்கும், ஞானமென்பார், கரையிலவென்பார்
ஒழுகும் ஆறும் நூலும் ஒன்றே என்பான் கராமா காளமேகன்.

:::நாகராஜன்:::

11 மார்., 2008

தமிழ் மீது கைவைக்காதே...

தமிழ் மீது கைவைக்காதே...

காதலித்தாய்
கைவிட்டாள்
தாடி வைத்தாய்
தண்ணி அடித்தாய்
அடுத்த பெண்ணிடம்
தோற்ற கதை சொல்லி
கல்யாணம் செய்தாய்
அப்புறம் ஏனடா
தமிழ் மீது கைவைத்து
கவிதைஎழுதி கொல்கிறாய்?

:::நாகராஜன்:::

அவள்... ஷபீர் அஹ்மத்

அவள் புன்னகையை

கனவில் கண்டேன்

அதனால்தானோ

கதறிக்கொண்டு எழுந்தேன்?

------------ --------- --------- ---//---- --------- --------- -------
ஒரு மாலை இளவெயில் நேரம்

அழகான இலையுதிர்காலம்

தொலைவில் அவள் முகம் பார்த்தேன்

அப்புறம்தான் இவள முகம் கண்டேன்

பல்டியடித்தேன் நானே.

------------ --------- --------- --------- ----//--- --------- --------- --------
நீண்ட நாள்
கனவில் வந்தாய்
நேற்றுதான்
நேரில் வந்தாய்
சுவாசமே ஸ்தம்பித்ததடி!

சாணம் ஏன் மிதித்து வந்தாய்?
------------ --------- --------- -------// --------- --------- --------- -
உன் போன்ற காதலி

எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும் யான்

பெற்ற அவஸ்தை பெறுக

இவ்வகிலம்
------------ --------- --------- --------- ----//--- --------- --------- ------
இன்று நான் அவளை

சொர்க்கத்தில் சந்தித்தேன்
இதயத்தில் கூக்குரல்

இங்கேயும் நரகமா?
------------ --------- --------- --------- --//----- --------- -------

ஷபீர் அஹ்மத்

மனிதா!....ஷபீர் அஹ்மத்

மனிதா!
நீ பொய்யனா பித்தனாகபடனா கசடனா

மழலைப் பருவத்தை மடைமையில் கழித்தாய்மடைமை தெளிந்ததும் விளையாட்டில் திளைத்தாய்

கல்வியின் காலங்களில் களவியல் வாசித்தாய்களவியல் தேர்ந்ததும் காதலை யோசித்தாய்

வாலிப வீரியத்தில் உணர்ச்சிகள் பிரதானம்உணர்ச்சிகள் வேகத்தில் உடலுக்கும் சமாதானம்

இதயங்கள் மறுத்துவிட்டு உருவங்கள் நேசித்தாய்உருவங்கள் தளர்ந்தபின் உள்ளங்கள் யாசித்தாய்

காதலிக்க வேண்டும் ஒரு கட்டுடல் மாதவிகைபிடிக்க மட்டும் தேவை குணத்துடன் கண்ணகி

பிழைப்புதேடி பறந்தபோது பெற்றவரை மறந்தாய்
பெற்றமக்கள் பிரிந்ததும் பிள்ளைப்பாசம் பேசினாய்

சுற்றங்கள் வந்தபோது செல்வங்கள் தேடினாய்செல்வங்கள் பொய்த்தபின் சொந்தங்கள் நாடினாய்

இருக்கும் வரையிலும் இன்பமே நாடிநின்றாய் இறக்கும் தருணத்தில் இறைவனைத் தேடுகின்றாய்

-ஷபீர் அஹ்மத்

பிரமிடு கவிதை

.
வா
சேர்
இதழ்
முத்தம்
உதடணை
பிடியிறுக்கு
கையளைத்துபார்
குழந்தையாய் மாறி


:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....:::நாகராஜன்:::

வினையெழுத்துக் கவிதை.....

பிற பாலுக்கழு
முகம் நோக்கிச் சிரி
தவழ் நட ஓடு
பாடம் படி தேர்வெழுது
விளையாடு சண்டையிடு

தெருப் பெண்களிடம்
செட்டைசெய் வம்பிழு
தொட்டுப்பார் புகைப்பிடி
மையால் மீசை வரை
படியில் தொங்கு பிரயாணி

கல்லூரி சேர் நண்பனைப்பெறு
காதலி பெண்ணைப் புரி
பிரி வருந்து மீண்டும்
சேர்கையில் மகிழ்
வாழ்க்கைப் பாதைக்குள் வா

வேலைக்கு அலை பணம் பார்
ஒண்ட ஓர் கூரை செய்
கல்யாணம் செய் பிள்ளை பெறு
வாலிபம் விலகு பொருள்
சேர் வித்தை அறி

உலகம் சுற்று அனுபவி
போகி மோகி பின் யோகி
நாற்பதில் எல்லாம் முடி
பற்றறுத்து பரமன் பதம் பார்
பந்தம் விலக்கு வாழ்தலின் நோக்கு காண்..

இல்லையெனில்.....

அனுபவங்களை திரட்டு
அசைபோடு நினைவுகளை
இதயத்தில் உள்ளதைக்
கைக்குக் கொண்டு வா
கவிதை எழுது.. இதுபோல...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - லாட்டரியும் சினிமா நடிகையும்

சிலேடைக்கவிதை - லாட்டரியும் சினிமா நடிகையும்

குலுக்கலுண்டாம், விளம்பரமும் உண்டாம், பலர் வியந்து பாராட்ட
அதிர்ஷ்டம் தேவையாம், சுற்றிலும் கூட்டம் காண் - வலையில் விழுந்தால்
சொத்தெல்லாம் போச்சென்பார், பழக்கம் கெடுதியாம், எல்லா மாநிலமும்
இருக்கும், குலுக்கிய நாள் கடந்தால் அரைகுறையாய் வீதியில் இளிக்கும் ...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - அரியும் சிவனும் ஒன்றே...

களைதலால் தீயால் தகித்தலால் விளையுண்டாதலால்
உமி அனைத்துப் பிடிக்குமாம் வானவன் புண்ணியமாம்
சாம்பல் உரமாம் போர் உண்டாம் நீர் உண்டாம்
வம்பன் கராமா காளமேகம் சொன்னால் தப்புண்டா?

:::நாகராஜன்:::

குறிப்பு - அரி என்பது அரிசி அல்லது விஷ்ணுவாகும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

முண்டிருக்கும் முழக்கமிடும் கடல் கடக்கும் ஒரு பக்கமும் சேராது
இடதுசாரிக் கொள்கைப்பிடிப்பிருக்கும் - சுய அபிப்ராயமே
சொந்தம் சேர்த்த சொத்து ஏதெனத் தெரியாமல் இறக்கும்
பார்ப் புலவனும் மலையாளியும் சமமாகுமா?

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

ஒரு கூடைக்குளடங்கும், கொத்துண்டு காண், விரியும் வகை,
நாமமுண்டு, மண்ணோடுதான் வளரும், துணை சேர்கையில்
மணக்கும் என்பார், தலையின்கண் வைத்ததால், தாள்
மடிக்கப் பாலைக்காணும் பூவும் பாம்பும் ஒன்றே..


:::நாகராஜன்:::

2 மார்., 2008

சுஜாதா மறைவு - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

நேற்றிரவு பத்தரைமணிக்கு அவரது மரணம் பற்றிய குறுஞ்செய்தி வந்தது. சில நிமிசங்கள் அது நிஜம் தானா என்று நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் பதினைந்து குறுஞ்செய்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தியது.
கல்லூரிப் பருவத்தில் என்னோடு படித்து நீண்ட காலம் தொடர்பில்லாமலிருந்த நண்பன் நள்ளிரவில் போன் செய்து அழும் குரலில் கேட்டான், நிஜமாவாடா ?. எனது மௌனம் அவனுக்கு பதிலாக இருந்திருக்க வேண்டும். சட்டென உடைந்த குரலில் எவ்வளவு படிச்சிருக்கோம். எவ்வளவு பேசியிருக்கிறோம். வாத்தியார் போயிட்டாரு இல்லையா என்று ஆதங்கத்துடன் சொன்னான். நிஜம் அது.

எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார். படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள். இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது. ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது. எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.ஒரு எழுத்தாளராக அவரது புனைகதைகள் உருவாக்கிய வாசகர்கள் ஒரு பக்கம் என்றால் அவரது விஞ்ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிமுகத்தின் வழியாக தங்கள் வாழ்வை உருவாக்கி கொண்டவர்கள் மறுபக்கம். இரண்டிலுமே அவருக்குத் தனியிடமிருக்கிறது. சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் அளவு கன்னடத்தில் கூட வேறு எவரும் எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை. நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது. ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார் என்று. ஒரு முறை லேண்ட்மார்கினுள் அவர் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்து பார்த்தேன். அவர் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தவுடனே தீர்மானித்துவிடுகிறார். சில நிமிச நேரம் கூட தேர்வு செய்ய யோசிப்பதில்லை. எப்படி சார் அது என்று கேட்டவுடன் தாழ்ந்த குரலில் பட்சி சொல்லுது என்று சிரித்த முகத்தோடு சொன்னார். அவருக்குள் இருந்த பட்சி கடைசி வரை சரியாகவே சொல்லிக் கொண்டிருந்தது. தமிழ் கதையுலகில் அவரது எழுத்து விசேசமானது. இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்பதற்கு அவரது நடையே உதாரணம். சொற்களை அவர் பயன்படுத்தும் விதம் ஆச்சரியமளிக்ககூடியது. குறிப்பாக அவரது வர்ணனைகள். சொல்லை உடைத்து சுருக்கும் லாவகம். அதை சவுக்கடி வசனநடை என்று சொல்லலாம். ஒரு சொடுக்கில் தாவிச் செல்லும் அற்புதம் கொண்டது. சுஜாதாவின் பழந்தமிழ் இலக்கியத் தேர்ச்சியும் தமிழ் கவிதைகளின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் மிக முக்கியமானது. அவர் கவிதைகளை உணர்ந்து வாசிப்பதையும் தான் உணர்ந்தவற்றை உலகிற்கு அடையாளம் காட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இன்று பிரபலங்களாக உள்ள பல முக்கியக் கவிஞர்கள் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அதுவும் அவர்களது முதல் தொகுப்புகள் வெளியான நாட்களில் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டவர்கள். அவரது கவிதைரசனை மொழிக்கு அப்பாற்பட்டது. சங்கக்கவிதையை ரசிப்பது போலவே ஹைகூ கவிதைகளை ரசித்திருக்கிறார். அவருக்கு வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் பிடித்திருக்கிறது இன்னொரு புறம் மகுடேஸ்வரனையும் பிடித்திருக்கிறது. அவருக்குள் எப்போதுமே ஒரு கவிஞன் இருந்தான். அவன் மிக தன்னடக்கமானவன். எழுதி தன்னை காட்டிக் கொள்ளாதவன். மாறாக கவிதையை ரசிப்பதையும் கவிதையின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதிலும், கவிதை வாசித்தலின் வழியாக தியானநிலையை உணர்ந்தவனுமாக இருந்திருக்கிறான். பகடிக்காக அவர் எழுதிய மரபுக்கவிதைகளில் கூட இலக்கணம் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கணிப்பொறியியல், இலக்கியம் நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞான கதைகள், சிறுகதைகள் குறுநாவல்கள், இசை என்று அவர் தொடாத துறைகளே இல்லை. எதிலும் அவர் நுனிப்புல் மேயவில்லை. சிறிய உதாரணம், ஒரு முறை அவரோடு நீலி கதை தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு நிமிசம் இருங்கள் என்றபடியே அவரது புத்தக அடுக்கிலிருந்து நுறு வருசங்களுக்கு முன்பு வெளியான பெரிய எழுத்து நீலிகதையை கொண்டு வந்து வாசித்து காட்டி விளக்கினார். அவர் தேடுதலில் கொண்ட நாட்டம் ஆச்சரியமளிக்க கூடியது. அதே நேரம் தனக்கு தெரியாதது தொடர்பாக அவர் உடனே ஒத்துக் கொள்வதோடு அதைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்பதற்கும் தயாராக இருப்பார்.தமிழ் சினிமாவில் அவரது கதைகள் முறையாகப் படமாக்கபடவில்லை என்ற குறை அவருக்குள் நெடுங்காலமாகவே இருந்து வந்தது. ஆனாலும் தான் வசனம் எழுதுகின்ற படங்கள் பற்றி அவருக்கு ஒரு குறையுமில்லை. அத்தோடு ஐம்பது வருசமாக எழுதப்பட்டு வந்த அடுக்குதொடர் வசனங்களும் கண்ணீர் மல்கி பெருகும் நீண்ட பிலாக்கணங்களையும் விலக்கி அவர் எழுதிய நறுக்கு தெறித்த வசனங்கள் இன்று என் போன்றோருக்கு முன்னோடியாக உள்ளன.அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது. எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.சுஜாதாவின் எழுத்து மூன்று தலைமுறைகளை தாண்டி இன்றும் தொடர்ந்த வாசிப்பிற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அவரது ஆளுமை எண்ணிக்கையற்ற வாசகர்களை உருவாக்கியிருக்கிறது. மேம்படுத்தியிருக்கிறது. அவர்களில் நானும் ஒருவனாகயிருக்கிறேன். சுஜாதா அதிகம் பேசக்கூடியவரில்லை. பொது விழாக்களில் கூட அவர் பேசுவதற்கு மிகுந்த தயக்கம் கொள்வார். அவர் பேசுவிரும்பியதெல்லாம் எழுத்தானது. சர்சைகள் விவாதங்கள். பாராட்டுகள் யாவற்றையும் மௌனமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இனியும் அவரோடு பேசிக் கொள்ள அவரது எழுத்து மட்டுமே இருக்கும். அவரது மௌனம் கவிதையைப் போல எங்கும் எப்போதும் நீக்கமற்று நிறைந்திருக்க கூடும்.பின்குறிப்பு. இதைக் கணிப்பொறியில் எழுதும் போது கூட முதல்முதலாக கணிப்பொறியில் எழுதியவர் சுஜாதா தான் என்ற நினைப்பு மேலோங்குகிறது. அவரைப்போல கணிப்பொறியில் எழுத வேண்டும் என்ற ஆசை சமீபமாக தான் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக நானும் சொல்லிக் கொள்கிறேன்.
போய் வாருங்கள் வாத்தியாரே.
எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்.

எழுத்தாளர் சுஜாதா மறைவு...

I am immensely droused with the emotions and feelings on hearing that the Gentleman who has always been my friend phylosopher and guide had passed away.

Our association goes right from Year 1975, ever since I started writing in Tamil Magazine called 'Savi'.

Being an engineer he was able to easily move with me despite age differences. I have been the stern critic for his writings. Couple of famous novels, he consulted me for college dialogues, to name one ' Kolaiyuthir Kaalam', which was a thriller novel in Kumutham.

He was the Deputy General Manager of Bharat Electronics Limited in Bangalore. He is the one who has invented the present day Electronic Voting Machine.

He has introduced me a lot of technical books those days for micro electronics, such as Adam Osborne Series etc. He did many movies, Ninaithale Inikkum, Priya, Indian, Anniyan, Boys, and latest Sivaji.

He has readily accepted to inagurate an association called Tamil Nadu Engineers Forum in Kuwait in 1999, when I requested him to visit Kuwait. Being the founder, I had the honor to honor this marvelous genious on stage and introduced him to many of the Kuwaiti Scholars.

I have been always inviting him to visit Dubai for a couple of days with me and he was not comfortable with his health for the last 3 years. I recently met him on October 2007 at his home, when Sivaji Shooting was going on. We discussed couple of technical things about camera and digital conversion. I updated him on my present business in Dubai.

He is a classmate to Dr. Abdul Kalam. Legendary relationship exists between these to genii.

I am spell bound with imotions. I remember the days in Bangalore where we used to have breakfast and discussion and discussion and discussions.

He survived with Heart Attack Three times. He underwent bypass surgery for 2 times. He had a pacemaker implanted permanently. He had high diabetes and his vision was affected by Glucoma.

Nothing stopped his spirits. He worked as a consultant for Pentafour in Chennai, till his last minute. He has very special friends like Kamal Hasan, Vairamuthu, Kalaignar and Jayalalitha.

He respected people. His serial stories have boosted the circulation of the weekly magazines.

He is a guru for many including Endamoori Virendranath, another Sujatha in Andra Pradesh.

I have no more left to write, but have a lot in my thoughts and heart.

My eyes are popping out tears.

The tear is the full stop to this paragraph.

May God Rest You in Peace, My Dear Friend.....Mr. Srirangam Srinivasan Rangarajan....Good Bye....

Nagarajan

சிலேடைக்கவி - சிவபெருமானும் மிளகாயும்

சிலேடைக்கவி - சிவபெருமானும் மிளகாயும்

புரம் எரித்தலால், பச்சை உடையார், வேண்டாதவர்க்கு
உள்ளமிளகாய், தரித்தத்தில் நீர் வரும், பழுத்த சிவப்பன்,
நீயிருக்கும் இடத்தில் சீவனுண்டு, மேலே குடையுண்டு,
எரியும் கையது, தென்னாடுடை சிவனும் மிளகாயும் ஒன்றே...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கள்ளும் கைப்பந்தும்

சிலேடைக்கவி - கள்ளும் கைப்பந்தும்

கோப்பையுண்டு, கையாள்வதால் பால் என்பார்,
உட்கொள்கையில் உடல் வீங்கும், அடித்தால் உயரே போகும்,
வெளியே உருண்டு விழுந்தால் ஆட்டம் முடிந்ததென்பார்,
வலையுண்டு தடுக்க, கண்டீர் கள்ளும் கைப்பந்தும் சமம்.

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - யானையும் கைதியும்

சிலேடைக்கவி - யானையும் கைதியும்

சங்கிலியால் பிணைப்பார் பொதுவில் கையுண்டு
கவளமாய் களியுண்பார் இரவில் உறக்கமில்லை
சட்டென்று மதம்பிடித்தல் குணமாம் ஆயுதத்திற்கு
அடங்குதல் கண்டீர் யானையும் கைதியும் சமன்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

முதிரும் முப்பத்திருபல், கழி கையிலேடுப்பர், உலர் காயம் ,மேலாம்
சுருங்கும் மேலெல்லாம், கைகால் தடுத்து தடிகொண்டடி வைப்பார்,
களியுண்டு அடிக்கடி (அடிக்கு அடி) கழியுண்டு , சுற்றுமிருந்து
வாய்பிளந்து போவார் காண், கழிச் சண்டையும் கிழவனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

முதிரும் முப்பத்திருபல், கழி கையிலேடுப்பர், உலர் காயம் ,மேலாம்
சுருங்கும் மேலெல்லாம், கைகால் தடுத்து தடிகொண்டடி வைப்பார்,
களியுண்டு அடிக்கடி (அடிக்கு அடி) கழியுண்டு , சுற்றுமிருந்து
வாய்பிளந்து போவார் காண், கழிச் சண்டையும் கிழவனும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பரமசிவனும் பலாப்பழமும்


சிலேடைக்கவி - பரமசிவனும் பலாப்பழமும்

பிடித்தொரு சடையுண்டு கொட்டையுண்டு மரவுரியன்
பருத்ததைப் பெற்றவன் தேமதுரன் நாவிற்கினியவன்
பிரம்படி பெற்றுப் பழுப்பன் கராமா வாழ் காளமேகன் சிலேடை
உருப்படியாய் செய்வது பலாவையும் பரமசிவனையுமா?

::::நாகராஜன்:::

விளக்கம்:

பிடித்தொரு சடையுண்டு கொட்டையுண்டு மரவுரியன்
சிவன்: பிடித்தது போல சடைமுடி உண்டு, கழுத்தில் ருத்திராக்ஷ கொட்டை அணிந்தவன், முனிவர்களுக்கான மரவுரி என்னும் ஆடை அணிந்தவன்
பலா: சுளையைச் சுற்றிலும் சடை போன்றவற்றால் பிடிக்கப்பட்டது, பலாச் சுளையில் கொட்டையிருக்கும், மரத்தில் காய்ப்பது பலா

பருத்ததைப் பெற்றவன் தேமதுரன் நாவிற்கினியவன்

சிவன்: பருமனான விநாயகரைப் பெற்றவன், அடியவர்க்கு இனியவன், திருநாவுக்கரசருக்குப் பிடித்தமானவன்
பலா: பலா அளவில் பெருத்ததாகும், இனிப்பானது, நாவிற்கு சுவையானது

பிரம்படி பெற்றுப் பழுப்பன் கராமா வாழ் காளமேகன் சிலேடை

சிவன்: சிவ லீலையில் பிட்டிற்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பழுத்த வேடதாரி
பலா: பலாவைப் பிரம்பால் அடித்தால் பழுக்கும்

உருப்படியாய் செய்வது பாலாவையும் பரமசிவனையுமா?

செய்யுள் முற்று முத்திரை வாக்கியம்

சிலேடைக்கவி - சம்சாரமும் மின்சாரமும்

சிலேடைக்கவி - சம்சாரமும் மின்சாரமும்

சுடும் தூக்கியடிக்கும் தரையில் விழுகையில் விளக்கணையும்
உள்ளே ஓடுவது ஒருத்தனுக்கும் புரியாது - எரிந்து விழும்
உலோகம் விரும்பும் தடிக்குப் படியாது மேல் உடுக்கும்
பாதுகாப்பின்றி அணுகாதே பெண்ணையும் மின்னையும்

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி- பழைய சோறும் சினிமா நடிகனும்

சிலேடைக்கவி- பழைய சோறும் சினிமா நடிகனும்

பாத்திரமது பற்றும் பழையதானால் புளிக்கும்
சமயத்திற்குதவும் இரவில் நீரில் மூழ்கும் காலையில்
தெளியும் துணையுடனிருந்தால் சிறக்கும் கூட்டம்
ஈயென்று மொய்க்கும் நடிகன் சமம் பழைய சோற்றிற்கே

விளக்கம்:

பாத்திரமது பற்றும் பழையதானால் புளிக்கும்
பழைய சோறு: பாத்திரத்தின் அடியில் தங்கும் பழைய சோறு பற்று எனப்படும், நாளான சோறு புளிக்கும்
நடிகன்: நடிக்கும் பாத்திரத்தை உணர்ந்து நடிப்பார், ஒரே மாதிரி நீண்ட நாள் நடித்தால் நடிப்பு புளித்துப் போகும்

சமயத்திற்குதவும் இரவில் நீரில் மூழ்கும்
பழைய சோறு: காலையில் உண்ண உதவும், மீந்த சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்
நடிகன்: நடிகர்கள் அவர்கள் சார்ந்த சாதிக்குதவுவார்கள், இரவில் குளிப்பார்கள் (அல்லது குடிப்பார்கள்)

காலையில் தெளியும் துணையுடனிருந்தால் சிறக்கும் கூட்டம்
பழைய சோறு: காலையில் பாத்திரம் திறந்தால் சோறு கீழேயும் நீர்த் தெளிந்து மேலேயும் காணும், ஊறுகாயின் துணையிருந்தால் உண்பதில் சிறப்பிருக்கும்
நடிகன்: காலை நேரம் தெளிவாக இருப்பார், துணை நடிகர்கள் உடன் நடிக்கையில் நடிகன் பாத்திரம் சிறப்பாய் விளங்கும்

ஈயென்று மொய்க்கும் நடிகன் சமம் பழைய சோற்றிற்கே
பழைய சோறு: சோற்றுச் சட்டியைத் திறந்தால் ஈக்கள் மொய்க்கும்
நடிகன்: நடிகனைச் சுற்றிலும் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும் அல்லது எதாவது கொடை கொடு என்று கேட்டு சுற்றி வரும்

:::நாகராஜன்:::

23 பிப்., 2008

சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...

சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...


திருடியவன் அவதாரம் உணர்த்தியவன் திருவெண்ணெய்

விரும்பியவன் உபதேசித் தறியன் கவிக் கம்பன்

அம்மகன் வம்பன் கோவர் கவிக் குடையன்

கம்பனுக்கும் கண்ணனுக்கும் தமிழ் சிலேடையாம்....


:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கலைஞரும் பேருந்து வண்டியும்

சிலேடைக்கவி - கலைஞரும் பேருந்து வண்டியும்

கண்ணாடி உண்டு அரசாங்கத்துக்குச் சொந்தம்
கண்டால் கூட்டம் முட்டி வரும் நடத்துனன் ஆனதால்
கோட்டையில் நிற்கும் நின்றவர்க்கு இடம் கொடுப்பதால் அகத்தில்
தொலைக் காட்சியுண்டு கலைஞரும் பேருந்தும் ஒன்றே..

:::நாகராஜன்::::

சிலேடைக் கவிதை! - ஷபிர் அஹ்மத்

சிலேடைக் கவிதை!

இல்லத்தின் ஒளிவிளக்கு உற்பத்திக்கு உறுதுணை
இணை சரியானால் பணி சிறக்கும் பிணை தவற பொறி பறக்கும்
முறையற்ற கைப்பட உதறித் தள்ளும் உலோகத்தின் தரமறிந்து
விரைவு கொள்ளும் உபயோகம் அறிந்தால் சேவகி உன்மத்தம் கொண்டால் அரக்கி ஆற்றல் உயர சக்தி பெருகும் அடக்கியாள அன்பு போதும்
சேவை பலவானால் செலவு அதிகம் சேமிப்புக்கோ இல்லை
சாத்தியம்! சம்சாரமும் மின்சாரமும் ஒன்றே!


பொருள் விளக்கம்:

இணை= husband=connection
பிணை தவற = angered = loose contact
முறையற்ற கைப்பட = unfair touch = unsafe handling
உதறித் தள்ளும் = will repel = will give shock
உலோகத்தின்= gold metal = conducting metals
விரைவு கொள்ளும்= haste to buy = conductivity variation
உன்மத்தம் = crazy = if get messed up
அரக்கி = destructive
ஆற்றல் = potential (voltage)
சக்தி = power (energy)
அன்பு போதும்= handle with care!
சேமிப்புக்கோ= storage of electricity

ஷபிர் அஹ்மத்

21 பிப்., 2008

சிலேடைக்கவி - வள்ளுவனும் நாயும்

சிலேடைக்கவி - வள்ளுவனும் நாயும்

வள்ளுண்டு சொல்லில் ஈரிரண்டடியாய் வந்திருக்கும்
வெண்பாவுண்டு, மனை விளிக்க நடுவில் நிற்கும் ஒரு பாத்திரம்
வெண் முடியுண்டு வாலாய் வா சுகி என்றேஉரைப்பார்
வான்புகழ்க் கவியே மன்னிப்பாய் இந்நாயின் சிலேடைக்கு!

:::நாகராஜன்:::

20 பிப்., 2008

சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்

சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்


அடுப்படி வாசம் பிறாண்டும் குணமுண்டு மெல்ல நடக்கும்

மடியிலிடம் பிடிக்கும் வேண்டுமதற்கு மாற்றுப் பால் - கண்மூடி

நடிக்குமது இருண்டதாய் வீடகன்றுப் போகையில் துர்சகுனமாம்

நன்றாயிருப்பாயா நாகராசா பெண்ணைப் பூனையாக்கியதற்கு . ..


:::நாகராஜன்:::

சிலேடைக்கவி......:::நாகராஜன்:::

சிலேடைக்கவி

அக்காளை தொட்டவனை அடிவயிற்றில் குத்தியது கொம்பால்
அம்மாவைப்பிடித்திழுத்து அடக்கியது கம்பால் - அக்காளை
அத்தான் பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய
அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு கொம்பில் கட்டிய பணம்


பாடல் விளக்கம்


அக்காளை தொட்டவனை - அந்தக் காளையைத் தொட்டவவனை

அடிவயிற்றில் குத்தியது கொம்பால்

அம்மாவைப்பிடித்திழுத்து - அந்த மாட்டைப் பிடித்து இழுத்து

அடக்கியது கம்பால் - குச்சி கொண்டு அடக்கினார்

அக்காளை அத்தான் - அக்காளையைத்தான் அதாவது அந்தக் காளையைதான்

பிடிக்கப்போகையில் பத்தாளை வீழ்த்திய


அக்காளை அடக்கிக் கட்டியவனுக்கு - அந்தக் காளையை அடக்கி கயிறில் கட்டியனுக்கு மட்டுமே

கொம்பில் கட்டிய பணம் - கிடைக்குமாம் கொம்பில் சுற்றி வைக்கப்பட்ட பண முடிச்சு

இக்கவிதை அலங்கா நல்லூர் காளை பிடி விழாவை வர்ணிப்பதாகும்...

:::நாகராஜன்:::

அந்தாதித் துதி....:::நாகராஜன்:::

அந்தாதித் துதி

அபிராமி ஆத்தாளை .....
ஈசனடி அமர்ந்தாளை
வணங்கிடும் அக்காளை
ஒன்றாய் இருந்தாளை
பித்தன் இடந்த்தோளை
அனைவரையும் ஈத்தாளை
மலைமேல் உற்றாளை
கங்கை நீர் ஊற்றாளை
சூல் கையில் எடுத்தாளை
எனை மகனாய் ஏற்றாளை
அணிந்தாளை ஐந்தாழை
ஒறுத்தாரை ஒறுத்தாளை
ஓதித் தெளிந்தாளை
அண்டம் காத்தாளை
ஞானம் கொடுத்தாளை
பல்லுயிர்ச் சார்ந்தாளை
குங்கலீயம் சூழ்ந்தாளை
சேவித்தவரைத் தாழ்த்தாளை
குங்கும நிறத்தாளை
கரங்கீழ்ப் படிந்தாளை
தாளறுத்தாள் படிந்தாளை
கடைக்கண் பார்த்தாளை
பக்தனுக்குப் பித்தாளை
கரன் கரம் பிடித்தாளை
ஈசன் இடம் பிடித்தாளை
அகிலம் பூத்தாளை
பிள்ளையீர் பெற்றாளை
மோகமதை மாய்த்தாளை
பசிக்குணவு வார்த்தாளை
கடுகேனும் வெறுத்தாளை
மேனியெல்லாம் வேர்த்தாளை
பாசத்தளை அறுத்தாளை
ஓதித் துதித்தாளை
நடமாடிக் குதித்தாளை
மாரிப் பொழித்தாளை
ஆறாய் வழிந்தாளை
அசுரனை விழித்தாளை
விதியதை வகுத்தாளை
ஞானம் பகுத்தாளை
வீரம் சொரித்தாளை
மேனிபச்சை உகுத்தாளை
வெள்ளிமலை வாழ்ந்தாளை
சிவனடி வீழ்நதாளை
அந்தமாதி அற்றாளை
பகை கொள்ளாதாளை
திரண்ட ஞானத்தாளை
மேகமெனும் மானத்தாளை
மச்சமெனும் மீனத்தாளை
தவமெனும் மோனத்தாளை
மினுக்கும் மஞ்சத்தாளை
அணியுடை விஞ்சித்தாளை
கொடையிலை வஞ்சித்தாளை
இடையது இளைத்தாளை
புலிமேல் உடுத்தாளை
உடுக்கைப் பிடித்தாளை
இடுக்கண் கலைந்தாளை
புலிவாகனம் வரித்தாளை
திரிபுரம் எரித்தாளை
திரிகண்ணவனை உரித்தாளை
ஏகம்பர் தவத்தாளை
கரும்பொடு இருந்தாளை
காளத்தில் ஞானக்கொழுந்தாளை
உயிர் மெய் எழுத்தாளை
உயிர் மெய் எழுத்தாலே
பணிந்தேன் அத்தாய்த்தாளை


:::நாகராஜன்:::

19 பிப்., 2008

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும் :::நாகராஜன்::::

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும்

இரைச்சலோடே வரும் வெளியில் நீர் குடிக்கும் முட்டி உருளும்
இடியுண்டு கூட்டமாய்ப் புரளும் வேண்டும்போது வாராது
பள்ளத்தில் நிற்கும் சாலையில் ஓடும் முன்னே வெளிச்சம் வரும்
தெப்பலாய் நனைக்கும் கார் என்பார் மழையும் பேருந்தும்

:::நாகராஜன்::::

உயிரின் இரகசியம்.....:::நாகராஜன்:::

உயிரின் இரகசியம்.....

ஞானம் தந்தான் மானம் தந்தான்
வானுளன் பெருமைக்கு வரிகள் போதா...

உலகம் யாவையும் உளவாக்கலும்
நிலைபெருத்தலும் நீக்கலும் நீங்கலும்

அலகிலா விளையட்டுடையானவன்
தலைவன் அன்னவர்க்கே சரணம்

பற்றற்றவன் உற்றிய பாதம்
பற்றுதலாம் பரம பதம்....

நீரில் பாசி போல நிலத்தில்
வேரு போல பற்றில்லாதவனவன்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஞானம்
ஆறுணர்வு தந்தவன் தாளே பற்றுக

நெஞ்சே அறி! ஞானம் சொன்னதைக்கேள்!
படைப்பின் இரகசியம் அறிவாய் நன்னெஞ்சே..

காணா வாயுக்கள் இரண்டாம் அவை
கலப்பதால் வரும் காணும் தண்ணீராம்....

நீராக வாயு விகிதம் வெப்பம் வேண்டும்
நீர்பிரிந்து ஆவியாகும் எதிர்மறை விதியில்

விதை உறக்கம் அறிவாய் நீ... நீரின்றி நிலமின்றி
உயிர் உள்ளடக்கி உறங்கும் எழுப்பும் வரை

விதை விழித்தெழ வேண்டுதல் இரண்டேயாம்
நீரும் சுவாசமும் பற்றிக்கொள்ள பிடியும்

மண்ணில் நீர் சேர பூமியில் பிடிக்கும்
தாழ் பரந்து உயர் வளரும் மரம்

விஞ்ஞானம் இல்லை உயிர் விளக்க
மெய்ஞானம் உண்டு தெளிவிக்க

உரைப்பேன் கேள் உயிர்பற்றை,
உடன்பட்டால் உபதேசிப்பேன்...

நிலம் காற்று நீர் தீ என்பது
பூதங்கள் என்பார் பூவுலகில்

நிலம் என்பது தாது உப்பு
காற்றென்பது பிராணவாயு

நீர் என்பது உடலில் தண்ணீர்
தீ என்பது உடலில் வெப்பம்

இவை அனைத்தும் உண்டிப்புவியில்
கலவை விகித சூட்சுமம் அவன் கையில்

சரிவிகிதம் கலவை சேர்கையில்
உடல் எனும் வேதி உண்டாகும்

உண்டான வேதியுடல் புலன்
உணர்வதுதான் உயிர்ப்பாகும்

கருவூரில் பிறந்து பையூரில் உறங்கி
மெய்யூரில் வளர்ந்து பாழுரில் தங்கி

பற்றற்றவன் பாதம் பற்றி நான்
வாழூர் செல்வது எக்காலம்?

உணர்வது முதலில் ஓர் அணுவாய்
அணுவின் பின்னே புழுவாய்

புழுவின் பின்னே மச்சமாய்
மீனின் பின்னே பறவையாய்

பறவையின் பின்னே விலங்காய்
விலங்கின் பின்னே மனிதனாய்

மனிதனின் பின்னே பேயாய்
பேயின் பின்னே பூதமாய்

பிறப்பென்பார் இதை ஏழு
சன்மம் என்பார் உடல் வதை

சகடச் சுற்றில் மீண்டும் நீ
புழுவாய் பிறப்பாய்

அல்லது தேவனாவாய் அது
உள்ளது உன் கையிலாம்

சரிவிகிதம் கண்ட உயிர்க்கு
விகிதம் மாற விதி மாறும்

காற்றிழந்தால் மூச்சில்லை
நீரிழந்தால் மூப்பாகும் கண்டாய்

தாதுப்புப் பிழையின் சலம் நிற்கும்
சூடிழந்தால் சுடுகாடே..

விகிதம் கலைந்தால் மரணம் உணரும்
உயிர்ப் போகும் வேதி உடல் அது உணரும்

விதி முடிந்ததென்பார் அது வலியதென்பார்
காலம் போனதேன்பார் காலன் வந்ததென்பார்

காலை மாலை காற்றை அடக்கினால்
கடவுள் அருகில் என்பான் அந்தணன்

கூடுதல் ஆயுள் தேடுதல் கூடும் என்பான்
அந்தணன் செய்வது கூடு புதுப்பிதலாம்

காற்றின் சூட்சுமக்கயிர் பற்றியவனை
புலன் அடக்கினால் காண முடியுமோ?

நூல் பிடி விட்டால் சாவான் அந்தணன்
சூத்திரம் மறந்த சூத்திரன் அவன்

புலன் அடக்குதல் பெருமை என்பான்
சித்தனும் அந்தப் புத்தனும்

புலன் அடக்கிப் பசியடக்கி உன் விகிதம்
நீயாய் கலைக்க உனக்கில்லை உரிமை...

உடல் வருத்தும் மெய்ஞானம்
காண்பான் முனியும் சமணனும்

யோகமும் போகமும் கடவுளைக்காணா
யாகமும் தொழுகையும் நமக்கின்னா..

கள் குடித்து கஞ்சா அடித்து கண்டேன்
கடவுள் என்பான் ஞானமில்லாதவன்

உடல் ஒரு கருவியாகும் என்றுணர்
உயிர் என்பது நீரில் பாசம் போல் என்றறி...

உடல் சூடு குறைகையில் ஆவி பிரியும்
ஆவிபோனால் கூடு மயானம் போகும்

அழுது புரள்வார் மனைவியும்
மக்களும் கிடத்திய சடலம் முன்பு

எரித்த பின் மயானம் ஒருமுறை
ஏனும் திரும்பி நோக்கார் மீண்டும்

உடைமையும் உற்றாரும் உடன் வர மாட்டா
கடமையும் தருமமும் செலுத்தும் உன் வழி

பற்றினால் உண்டு துயர் துன்பம்
பற்றற்றால் உண்டு என்றும் இன்பம்

திரண்ட முலை உருண்ட தொடை
கருத்த விழி பெருத்த சடை

தங்கம் வெள்ளி கூரை நிலம் பணம்
மக்கள் கிழத்தி சுற்றம் சிநேகம்

போகமாம் இவையனைத்தும்
பாசமாய் பற்றி ஈர்க்கும் உனை

பெண்ணோ பொருளோ பற்று வைக்காதே
புண்ணாக்கும் உன்னுடன்தான் வாராதே

தாளை அறுத்தல் கடினம் தான்
அறுத்த பின் உண்டு வீடுதான்

ஒன்பது வாசல் உண்டென்று காண்
வந்து விழுந்தது ஏதென்று பார்

பீளையும் சீழும் உமிழும் மலமும்
சளியும் வியர்வையும் சலமும்

புலனைந்தையும் சற்றே அடக்கிப்பார்
புலமாள்வாய் பெரியோர் சொல்வார்

ஆசையை அடக்கிப்பார் மடமே
பார் அடக்கும் சித்தி வருமே

கொண்டுவரவில்லை கொண்டு போவதில்லை
நீஎன்பது யாரென்று உனக்குள்ளே கேள்...

வழியில்லை விஞ்ஞானத்தில்
விடையுண்டு மெய்ஞானத்தில்….



:::நாகராஜன்:::

18 பிப்., 2008

சிலேடைக்கவி - பெண்ணும் பித்தளையும்

சிலேடைக்கவி - பெண்ணும் பித்தளையும்

நகையானால் இளிக்கும் வீட்டிற்க்கு விளக்காகும்
தேய்வதால் துலங்கும் குடும்பத்தில் பாத்திரமாகும் கச்சுண்டு
மஞ்சள் பூண்டு ஆற்றங்கரை செல்கையில் இடுப்பாடும்
நெஞ்சே சொல் பெண்ணும் பித்தளையும் வேறு வேறா?

:::நாகராஜன்::::

சிலேடைக்கவி...:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கராமா வாழ் தமிழனின் வாரக்கடைசி காட்சிகள்
(விளக்கம் கீழே)

அப்பாவிற்க்கரிசி வாங்கி அம்மாவிற்கேற்ற பணியாரம் செய்ய
மாவிலையால் மேலிடாள் துளியேனும் உப்புமா மனையில்
மாவுண்டாதலால் தப்பாமல் குடும்பமாய் நிற்கும் வாசலில்
அதிரசம் அக்காவிற்கு போகையில் ...துயரன்றோ துபாய்க்கு...


விளக்கம்
அப்பாவிற்கு - அந்த பாவிற்கு (பாவு என்றால் அளக்கும் படி)
அம்மாவிற்கு - அந்த மாவிற்கு ஏற்ப பணியாரம் செய்ய
மாவிலையால் - மாவு போதவில்லையால்
மேலிடாள் துளியேனும் உப்பு மா மனையில் - சிறு ஊறுகாய் (உப்பு + மாங்காய்) கூட கொடுக்க மாட்டாள் மனைவி
மாவுண்டாதலால் - மா (செல்வம்) இருப்பதால்
தப்பாமல் குடும்பமாய் நிற்கும் வாசலில் - கராமா ஓட்டல் வாசல்களில் வியாழன்
வெள்ளியன்று ராத்திரி மணி பனிரெண்டு வரை
கூட்டமாய் நிற்கும் குடும்பம்.
அதிரசம் - மிகவும் ரசிக்கத்தக்கதாகும் அக்காட்சி
அக்காவிற்கு போகையில் - அந்த ஊர் பக்கம் போகும்போது

:::நாகராஜன்:::


17 பிப்., 2008

சிலேடைக்கவி... :::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பாகற்காயும் கந்தல் துணியும்

கசக்குதல் கூடியதால் பறிக்க ஏதுவாய் கொடியில் தொங்குதலால்
துவட்டலுக்கு உதவியதால் மேலே சொரசொரப்பாய் மஞ்சளாய் மாறும்
பழையதானால் தண்ணீர் இல்லாத் துபாயில் தலை துவட்டி
மழைநாளில் கவிராயன் கூறுவேன் பாகலும் கந்தலும் ஒன்றென்று!

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி....::::நாகராஜன்::::

சிலேடைக்கவி - பாம்பும் மலையாளிப் பெண்ணும்

சே(ட்)டன் என்பார் தலைக்கேறும் அவ்விடம் என்பார்
கட்டுடல் உண்டு வெளியே வருகையில் தலை விரித்து நெளியும்
தன் குலமே சேரும் வெளுப்பு முண்டு தமிழ் வீசும் தரணியில்
நாகராசன் சொல்வேன் சமன் மலையாளியும் பாம்பும்

சிலேடைக்கவி - அருவியும் மூக்குச்சளியும்

மேல் தொடங்கித் தாழ் ஒழுகும் கொட்டும் இயல்புண்டு
பச்சை நிறம் சேரும் அருகில் சாரல் அடிக்கும் மழையே பருவம்
கராமா காளமேகன் கவிராயன் நாகராசன் சொன்னது கேள்
அருவியும் மூக்குச்சளியும் இவ்விதத்தில் ஒன்றேயாம்


:::நாகராசன்:::

16 பிப்., 2008

அடங்கா மனைவி... :::நாகராஜன்:::

அடங்கா மனைவி...

ஆனைப்பெரிதெனினும் அங்குசத்திற்கு அடங்கும்
பானைப்பெரிதாயினும் கயிற்றுரிக்குள் அடங்கும்
ஆறு பெரிதானாலும் அகண்ட கரைக்கடங்கும்
எதைக்கொண்டு கட்டிய பெண் அடங்கும்?

வலியவன் எத்தனை பெரியவன் ஆயினும்
மெலியவன் தாள் வீழும் நாள் வரும்
வலியவன் வெளியே பெரியவன் ஆனாலும்
விழுவது பெண்ணின் தாள் வெளியில் அறியார்

எறும்பூர கல்லும் குழியும்
ஏர் ஊற நெல்லும் விளையும்
சேர்ந்தூர தேரும் நகரும்
எது செய்தல் பெண் நகரும்...

நிலவில் அழுக்கிருந்தாலும் உலகிற்கு வெளிச்சம்
மெய்யில் தாள் வலித்தால் கண் உகுக்கும் நீர்
கொள்வார் இல்லையெனினும் காக்கை விரும்பும் வேப்பங்கனி..
சுயநலம் இல்லாது வாழ்ந்தும் புரியாதே உன் மனை..

தாழற்ற கதவில் வலுவில்லை கொண்ட
தலையற்ற பெண்டிர்க்கு வழ்வுமில்லை
உடல் தாக்க விரையும் தடியை எதிர்பார்ப்பின்றி
முன்னின்று கரம் சென்று காக்கும் விழும் அடியை...

காப்புளது குளம் கரையுளது ஆறு விரிந்து பரந்த
கடலுக்குண்டோ கரை? கணவனைப்பேனும் பெண்டிர்க்கு
காவலுண்டு என்றைக்கும் கண்டீர் இம்மாநிலத்தீர்
கண் அற்றவன் அஞ்சான் இருளைக்கண்டு...

நிலம் நீர் காற்று நெருப்பு பூதங்களிவை மாத்திரம்
இதில் சரிவிகிதம் உணர்தல் உயிரின் மந்திரம் - பூத
விகிதம் கலைந்தால் உயிர் மறையும் என்பதே விதி
உயிர் மறையும் உணர்வே இறப்பென்றுணர் மனையே...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி....:::நாகராஜன்::;

சிலேடைக்கவி - ஒரு விளக்கம்.

ஒரே பாடல் இருவேறு பதங்களுக்கோ இருவேறு பொருள்களுக்கோ பொதுவாய் அமைவதை சிலேடை என்கிறோம். பண்டைய காலத்தில் கவி காளமேகப்புலவர் என்பார் மாத்திரம் இச்சிலேடைக்கவிதைகளை நமக்குத் தந்து போனார். அவர் காலம் போனபின் சிலேடைக்கவி வழக்கொழிந்து மரபுக்கவியும் புதுக்கவியும் மட்டும் அளவில் பெரிதாக உருவெடுத்தன. சம காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர் கி வா சகந்நாதன் மட்டும் சிலேடையை உரைநடையிலும் பேச்சிலும் உபயோகித்து மகிழ்வித்தார். வழக்கொழிந்த சிலேடைக்கவிக்கொரு வாழ்க்கை கொடுப்போம் . சில சிலேடைக்கவிதைகளை இங்கே நான் தொடுத்திருக்கிறேன். தமிழ் அறிந்த புலவர்கள் இலக்கண பிழை இருந்தால் எளியவனை மன்னிக்கவும். தயை கூர்ந்து தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், திருத்திக்கொள்கிறேன். எளிமையான நடையில் புரியும்படி எழுதியுள்ளேன் . தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பி, எவ்வொப்பிலக்கிய சிலேடைக்கவிதையை மீண்டும் வளர உதவுங்கள்.

:::நாகராஜன்:::

அரசாங்கமும்... குதிரையும்...


வரியுண்டாதலால் நல்ல குடிதேர்வால் கோட்டையில் இருத்தலால்
நாற்காலியாதலால் மக்களைச் சுமப்பதால் - நன்னாட்டில் இனிய
கராமா வாழ் காளமேகம் நாகராசன் உரைப்பதைக்கேள்
அரசாங்கமும் குதிரையும் ஒன்றே.

பின் கால் இழுத்தலால் நாற்காலி வேட்டைக்காய் கூட்டமும்
ஓட்டமும் உண்டதால் கள்ளில் கொள்ளில் விருப்பமுண்டாதலால்
கராமா வாழ் கவிராயன் உரைப்பதைக்கேள் பிடரி உடைய
பரியும் அரசும் ஒன்றே என்று.

க(ட்)ச்சியுடையதாம் போர்புரிவதாம் புறங்காட்டுதலாம்
சட்டத்தின் முன் நிற்பதால் நேரெதிர் மோதுதலால் - மாளிகை வாசத்தினால்
கட்டிய மனைவியுடன் சண்டையிடும் கராமா வாழ் கவி சொன்னேன் கேள்
கொட்டிலில் கட்டும் குதிரையும் அரசும் ஒன்றேயாம்.

கழுதையும் ஊசியும் ...

சந்தில் நக அழுக்கெடுத்தலால் அங்கு தைத்தலால் பழுதுக்குதவுவதால்
துணிகளைச் சேர்ப்பதால் துளையுள்ள செவியுள்ளதால் - விருப்பமுடன்
காகிதம் சேரும் தொலையும்போது கால் பாதையில் கவனம் வைப்பதால்
கராமா காளமேகம் உரைப்பேன் கேள் கழுதைக்கு சமன் ஊசிஎன்று.

ஆலமரமும் புகைப்படமும்.

நிழலாவதால் சேனை அரசர் படையையும் உள்ளடக்குவதால்
விழுவதால் சட்டத்திற்கும் தோதாய் வெளிச்சத்திற்கு எதிரியாய்
பல்லுக்கு உதவியாய் இருப்பதால் கவிராயன் நாகராசன் உரைப்பேன்
தொல்லுலகில் ஆலமரமும் புகைப்படமும் சரிசமம் என்று..

:::நாகராஜன்:::

நன்றி நண்பர்களே! - தனமதவன்

மழையில் நனைந்தேன்
உங்கள் புதுக்கவிதைமழையில் நனைந்தேன்.

விட்ட உறவை
வீதியில் புதுபித்தோம்
இந்த வலை வீதியில் புதுப்பிதோம்!! .

நேரில் கண்டோம்
நெஞ்சார அணைத்தோம்!
நேரம் தெரியாமல் நெடு நேரம் பேசினோம்!! .

கூடினோம்! கொட்டமடித்தோம்!
கொண்டாடினோம்!!
கும்மலமிட்டோம்! கூட்டான் சோறும் உண்டோம். .

நாட்கள் கடந்து நான் இங்கே வந்தாலும்
நல்ல கவிதை பார்த்து
நெஞ்சம் உருகினேன் உள்ளம் மகிழ்ந்தேன்!
.
நன்றி நண்பர்களே!
உங்கள் பணி தொடரட்டும்
நாவில் சுவையூட்டும் நற்றமிழ் வாசிப்போம்
.
தனமாதவன்

கவிதைக்கழகு - ஷபீர் அஹ்மத்

கல்விக்கழகு கசடறக் கற்றல் நல்ல
கவிதைக்கழகு 'நச்'சென்று இருத்தல்
- ஷபிர் அஹ்மத்

பற்றறு....:::நாகராஜன்::;

பற்றறு....
(இவ்வடிகளுக்குக் கீழே விளக்கம் காண்க)

பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்

பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..

பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
பற்றற்று ஆசை களைந்தவன் முனிவன்..

பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..

வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..

பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்

பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..

:::நாகராஜன்::;


1. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்:
கடல் நீரில் கரைந்திருப்பது உப்பு. ஆனாலும் கடல் மீன் கரிப்பதில்லை. உப்பு நீரைப்பற்றியிருந்தாலும் மீனைப்பற்றுவதில்லை. இது கடவுளின் இயல்பு.

பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்:
பூமி மற்றும் ஏனைய கோள்கள் ஆதாரம் இன்றி வளி மண்டலத்தில் மிதக்கின்றன. எந்தப் பிடிப்பும் இல்லாமல் அவைகளைப் பற்றி இயக்குபவன் அவன். இது மற்றொரு கடவுள் இயல்பு.

2. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
எதிலும் பற்று வைத்தவனும் பற்றுவ் வைக்கதவனும் ஆகிய இறைவன் அடி பற்றுக.

அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
ஆசையைத் துறந்து இன்மை மறுமை எனும் நிலை அடைவாயாக. (வீடு - சுவர்க்கம்)

3. பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
எதிலும் பற்றில்லாதிருக்க ஆடையையும் துறந்தவர்கள் ஜெயின் இனம் என்னும் சமணர் இனம்.
பற்றற்றுஆசை களைந்தவன் முனிவன்..
ஆசையைத் துறந்து மோகம் துறந்தவன் முனிவன்..

4. பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
இவ்வுலகில் கிடைக்கும் மூவகை துயர்தான் பணம், பாசம் மற்றும் மோகம்.
இறைவனை அறிய முடியாமல் நமக்குத் தடைக்கற்கள் இவை மட்டுமே. இம்மூன்றும் துறந்தால் ஞானம் வரும். பற்றற்ற நிலை வரும். இறைவன் வடிவமற்றவன். இறைவனை விவரிக்க மனிதனால் முடியாது. எனவே இறைவன் எப்படி இருப்பான் என்பதைக்காணாமல் அவனை உணர்தல் மட்டுமே மனிதனால் முடியும். மனிதன் படைத்த மதங்களில் மட்டும் இறைவன் வேறு வேறு. இறைவன் படைத்த உலகில் அவன் ஒன்று என்றே அறியப்படுகிறான்.

பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..
இறைவன் இருப்பது அடுத்தவன் மகிழ்வில். பசித்தவனுக்கு உணவிட்டால் இறைவன் உன்னுள் இருப்பதை உணர்வாய். வலியறியும் எவ்வுடம்பு நமக்கு என்றும் ஒரு துயரம் தான். வலியறியா நிலை அவனால் மட்டும் கொடுக்க முடியும்.

5. வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
ஆகையினால், பணம், பெண், மோகம் இவற்றால் வலி உணரும் இவ்வுடல் தேவையற்றது. மல சலம் சுமக்கும் இவ்வுடல் நிலையற்றது. ஒன்பது வாசல் உள்ள இவ்வுடல் வெளிப்படுத்தல் எல்லாம் கசடும் கழிவும் மட்டுமே. தெளிவாக அறிவீர்.

மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..
நம் உயிர் மற்றும் உடல் இரண்டும் வேறு வேறு. உயிர் நம் உடலைப் பற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் உயிர் தன் கூடு மாற்றிக்கொள்ளும். வலி உணரும் இப்பிறப்பு நமக்கு ஒரு இடறேயன்றி வரமல்ல என்று உணர்வீர்.

6. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்


ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.

7. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..


ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.

15 பிப்., 2008

ஒளிக்கவிதை - ஷபீர் அஹ்மத்




நட்சத்திரங்களைப் பறித்துவிட்டு
வானத்தில் தோரணம் கட்டியது யார்?
மலைக்கும் மேகத்துக்கும் கல்யாணமோ?
- ஷபீர் அஹ்மத்

ஒளிக்கவிதை - :::நாகராஜன்:::



மழைக்கும் மேகத்திற்கும் மறுமணமோ....
மலைக்கும் மாலைக்கும் தோரணமோ...

வர்ணத்தை நூல் கட்டி விட்டது யார்..
பட்டொளி வீசிப் பறக்குது பார்....

மேகத்தின் கொடையோ பன்னீர் அருவிகள்
மலை வகுத்த வழியோ வெள்ளிச்சரிகைகள்..

பொழிந்தது போதும் மருதத்தில் மேகமே...
வா கிராமத்துப்பக்கம் தீர்க்க எம் தாகமே..

சீக்கிரம் வா முடிந்து போனது உன்
திருமணமும் முதல் இரவும்....

வராவிட்டால் உன்னை வரவைக்க கிராமத்தில்
செய்வோம் கழுதைக்கு கல்யாணம்..

::::நாகராஜன்:::

கொடை....:::நாகராஜன்:::

செய்தி:

அதியமான் கோட்டையில் நக்சலைட்டுகள் ஸ்டேஷன் புகுந்துத் துப்பாக்கித் திருடியதில் போலீஸ்காரர்கள் உடந்தை..

நன்றி- சன் டிவி


கொடை:
தனக்கு வேண்டாம் நெடுவாழ்வு

உனக்குத்தந்தான் ஔவையே நெல்லிக்கனி...


விடுமோ வள்ளல்தன்மை

அதியமான் ஆண்ட நாட்டில்...

தமிழ் மாநிலக் காவலருக்கு
தப்பில்லை போலும்....

திருடனுக்கு துப்பாக்கித்

தூக்கித் தந்தாலும்....


:::நாகராஜன்:::

சங்கக் கவிதைகள்....வ. மதிவாணன் - சிங்கப்பூர்

சங்கக் கவிதைகள்....
இப்படியும் கூட யோசிக்க முடியுமா?

ரொம்ப ஆச்சர்யமாகவும் அதே சமயத்திலே

enjoyable ஆகவும் இருந்தது..


வ. மதிவாணன் - சிங்கப்பூர்

ஏ ஃபார் ஆப்பிள்

பி ஃபார் பிக் ஆப்பிள்

சி ஃபார் சின்ன ஆப்பிள்

டி ஃபார் டபுள் ஆப்பிள்

ஈ ஃபார் இன்னொரு ஆப்பிள்
- ஆப்பிளை அறுத்து வைத்து திங்காமல்யோசிப்போர் சங்கம்

என்னதான் பூமி சூரியனைச்

சுற்றிச் சுற்றி வந்தாலும்

பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...

- நாசா வில் வேலை வாங்கத் துடிப்போர் சங்கம்


பவர் ஃபைல்யூருக்கும்

லவ் ஃபைல்யூருக்கும்

என்ன ஒற்றுமை? ....
பவர் ஃபைல்யூர் ஆனால்

வீடு இருட்டாகும்

லவ் ஃபைல்யூர் ஆனால்

வாழ்க்கை வெளிச்சமாகும்...


- பிரம்மச்சாரிகள் சங்கம்

(தலைமை இடம்: வெளி நாடு..)


சங்க முழக்கங்கள்


விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல

பரிட்சையில் பிட்டுக்கொடுப்பதும் நட்பேயாம்....


- மிட்நைட்டில் படித்தும் மண்டையில் ஏறாதோர் சங்கம்

இந்தியாவில்...

தோண்டினால் தங்கம் கிடைக்கும்

வெட்டினால் வெள்ளி கிடைக்கும்

அடித்தால் அலுமினியம் கிடைக்கும் ஆனால்

படித்தால் மட்டும் வேலை கிடைக்காது..


- வேலையில்லாமல் யோசிப்போர் சங்கம்


என்னதான் தீனி போட்டு

கோழி வளர்த்தாலும்

அது முட்டைதான் போடும்

100/100 போடாது

- கையேந்தி பவனில் கோழிக்கால் சாப்பிடுவோர் சங்கம்

என்னைப்பார் யோகம் வரும்

ஃபிகரைப்பார் சோகம் வரும்


- ஃபிகரு வந்தாலும் பார்க்கததுபோல் நடிப்பவர் சங்கம்


- தொகுப்பு: மணிவண்ணன்

அனுப்பியவர்: எஸ். வாசுதேவன் , சிங்கப்பூர்

கடவுள் வந்திருந்தார்...:::நாகராஜன்:::

கடவுள் வந்திருந்தார்...

காலம் பல கடந்தாலும்
கடவுள் இங்கே வந்திருந்தார்...

கூப்பிட்டதும் வாராமல் காலம் கடந்தே
வந்தார்... கடமை நிறைய இருந்ததென்றார்...

கடவுளுக்கில்லை கையும் காலும்..
காலண்டர் அச்சில் நான் கண்டது போல...

கடவுளுக்கில்லை மெய்யில் வடுக்கள்
கடவுளுக்கில்லை வெறும் கை மட்டும்...

கடவுள் இல்லை ஆண் பெண் வடிவாய்..
கடவுள் இல்லை உயர்த்திய கைகளாய்..

கடவுள் வந்தார் ஓர் ஒளி வடிவாய்... முகமில்லை
அவர்க்கு... இடையில் மொழியில்லை எமக்கு ..

ஒளி ஊடகம் சென்றது என்னுள்ளே.. என்
உள்ளம் உணர்ந்தது கடவுள் மொழி..

மௌனமாய் இருந்தோம் சில மணித்துளிகள் ..
கேட்பதைக் கேள் என்றார் நம் கடவுள்...

எங்கே இருக்கிறாய் நீ என்றேன்...வானத்தில்
இருக்கிறேன் எனவில்லை அவன்...

விளித்தால் ஏன் வருவதில்லை என்றேன்
விளிப்பவர்க்கு இல்லை தகுதி என்றான்...

உன்னை எங்கே காண்பேன் இனி என்றேன்..
காணும் இடம் என்று ஒரு பட்டியல் தந்தான்...

ஏழைக்கு இடும் உணவில், ஒரு குழந்தையின்
சிரிப்பில், வறியவனுக்குதவும் வழிமுறைகளில்..

பெற்றோர் இழந்த பிள்ளையில், கணவனில்லாப் பெண்ணில்
ஏய்ச்சிப்பிழைக்கா எஜமானன், ஏமாற்றாத மாந்தரிடம்,

கற்றுக்கொடுத்த குருவிடம் பெற்ற வயிற்றுக் கருவிடம்
பற்றில்லா பக்தனிடம் சிற்றின்பம் அற்றவனிடம்..

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவன்
தாரம் இழந்த பெண்ணை மதித்தவன்

பட்சி மிருகத்தோடு பகையற்றவன், பணத்திற்காய்
பாசம் கொடுக்காதவன், பெற்றவரை மறக்காதவன்

கல்விக்கு உதவியவன், கடமைக்குத் தயங்காதவன்
வலி உணர்ந்த வலியவன் வழக்காடப் போகாதவன்

வாக்கில் சுத்தம் உண்டானவன் வேசிக்கு உதவியவன்
வாய்மையின் வலிமையை உணர்ந்தவன்

பகைவனை நேசித்தவன் பசியறிந்து கொடுத்தவன்,
பாத்திரம் அறிந்து பிச்சையிட்டவன்

அடுத்தவன் மனையை விரும்பாதவன்
ஆலய சொத்தை அபகரிக்காதவன்

உருவின்றி அருவிலும் அருவற்ற
உருவிலும் புல்லாய் பூண்டாய் புழுவாய்

மரமாய் மீனாய்ப் பறவையாய் பாம்பாய்
விலங்காய் மனிதனாய் பூதமாய்..

வானாகி மண்ணாகி ஒளியாகி வளியாகி
ஊணாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்..

ஒலியாகி வழியாகி விருத்தமாய் செய்யுளாய்
விதியாய் விளக்கமாய் விளங்காமலாய்

அத்தனை இடத்திலும் என்னைப் பார்ப்பாய்...
புத்தனை போல் அந்தச் சித்தனைப் போல்..

இங்கெல்லாம் தேடாமல் வேறெங்கும் தேடாதே...
இங்கில்லைஎன்றால் எங்கும் இல்லை மறவாதே...

புரிந்தது எனக்கு.. புரியவில்லை எனக்கு..
ஒளி மறைந்தது ஓரிரு நிமிடத்தில்....

கடவுள் வந்திருந்தார்... என் கண்களைத் திறந்திருந்தார்..
எங்கும் இருக்கிறேன் என்றது இதுதானோ?....

:::நாகராஜன்:::

14 பிப்., 2008

காதல் கவிதை - சென்னைத் தமிழில்!::::நாகராஜன்:::

காதலர் தின வாழ்த்துக்கள்

வாரவதி மேல குந்திக்கினு கீறேன்...
வாத்யாரே வராங்காட்டி பேஜாராப் போறேன் ...

காவாக் கஸ்மாலம் கப்பு அடிக்கிது...
மூச்சு புடிச்சா மப்பு அடிக்கிது..

மைனரு மன்னாரு கண்டுக்கினு போறான்..
மஜ்ஜானம் உதாரா வூட்டாண்ட வர்றான் ...

கபால்னு மச்சான் நீ வா மண்ணடி ரோட்டுக்கா...
கபாலி நெஞ்சில மஞ்சா சோத்தை எடுத்துக்க ...

சொம்மாங்காட்டியும் குந்திக்கினா பீலிங்கா கீது..
மச்சான் நீ இல்லாமே படா பேஜாரா போவுது...

நீ இல்லாமே மனசு சொம்மா புஸ்ஸுன்னு கீது...
நெனப்பெல்லாம் எங்கேயோ இஸ்துகினு போவுது...

லவ்வுல இம்மாம் பேஜாரா கீதே?
கண்ணாலம் கட்டுனா கரிட்டாப் போவுமா?

ரோட்டுல போறவன் கண்ணெல்லாம் அடிக்குறான்...
பீச்சாங்கை பக்கமா சொம்மா வரியாங்கறான்...

மஜ்ஜானம் முல்லா கூப்புட வராங்காட்டி நான்
மைனரு மன்னாரோடெ ஜகா வாங்கிப் பூடுவேன் ....

பிரியாணி பொட்டலம் பிரிக்காத மாதிரி...
பிரிஞ்சிக்கோ மச்சான் முண்டச்சி மனசெ...

::::நாகராஜன்:::

தமிழ்த்தாயே என்னை மன்னிப்பாயா.. உன் மொழியை நான் களவாண்டதிற்கும் மேலே இருப்பதை கவிதை என்று சொன்னதிற்க்கும்...

உலோபி வீட்டு உரிப்பானை ...

உலோபியின் வீட்டின்
கூரையில் தொங்கும்
ஒன்றிரண்டு உரிகள்....

உத்திரத்தில் தொங்கும்
உள்ளே உள்ளது
என்றும் வெளியே வாராது...

காலம் அழிக்கும் அதை
கவலை இல்லை
உலோபிக்கும்...

காலம் மாறும்....
கவலையும் வரும் கையும்
கூப்பும் கடவுளின் முன்...

காலத்தில் செய்யா கருமங்கள்
அனைத்தும் கூட்டிச்
செல்லுமோ சொர்க்கம் வரை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் வரும்..

வாழ முடியாதான் வாழ்விற்கு
வழியுண்டோ என்று யோசி..
இல்லை என்றாலும் பலரிடம் யாசி..

தோள் கொடு முடியாதவன்
முதுகிற்கு... பாதியைப்பிரி
சுமப்பவன் பாரத்தை...

கொடுத்துப்பார் கொடை வரும்
சுமந்து பார் சுகம் வரும்..
முன்னே பார் சொர்க்கம் தெரியும் ..

:::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்... :::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்...

படிக்கும் காலத்தில் தளையும் வெண்பாவும்
தலையில் ஏறவில்லையா இல்லை தமிழ் பிடிக்கவில்லையா?

அடுத்தவன் கவிதை மனதை துளைக்கும்போது
கை பரபரத்து கவிதை எழுத துடிக்கிறதா?

வா... கவிதை எழுதுவோம்... உனக்குள் உணரும்
உணர்வுகளுக்கு வரி வடிவம் கொடுப்போம்...

மனசு உணர்ந்ததை வரிக்குள் கொண்டு வா..
பிறப்போ இறப்போ பூப்படைந்ததோ புஷ்பித்ததோ..

பிரிவோ சந்திப்போ பிள்ளையோ பெருமையோ
கடவுளோ தாசியோ மனிதனோ மிருகமோ..

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் யாவும் மற...

கைக்கு வந்ததை கிறுக்கிப்பார்,...
கிறுக்கிய வாக்குகளை குறுக்கிப்பார்....

வரிகளின் முதல் வாக்கு முக்கியம்....
ஒலிக்க வேண்டும் ஒரே மாதிரி அவை..

குறைக்கு குரையும் நிறைக்கு நிரையும்
எழுத்துக்குக் கழுத்தும் யானைக்குப் பானையும்...

எண்ணிப்பார் எத்தனை வாக்குகள் அறிவாய் நீ...
அத்தனையும் வரிசையாய் வரியாக்கிப்பார் ...

முடியும் வாக்குகள் அனைத்தும் மோனை என்பார்..
மோனைக்கும் எதுகைக்கும் அதே இலக்கணம்....

முடியும் வாக்கிற்கும் வார்த்தைகளை விரி...
படியும் என்றால் விடியும் மாலைக்குக் காலை...

எதுகையும் மோனையும் உனக்குக் கீழ் படிந்தால்
சந்தமும் படிமமும் உன் வசப் படும்....

பின் ஒரு வரிக்கு நான்கு நான்காய் வார்த்தைகள்..
முன் அனுபவம் வேண்டாம் கவிதைக்கு...

இரு வரி கவிதை வெண்பா...நான்கு வரி செய்யுள்
ஆறுவரி விருத்தம் அளவில்லா வரிகள் இலக்கியம்...

எதுகை மோனை சந்தம் படிமம் நான்கும்
இருந்தால் நீயும் ஒரு கவிஞன்....

தமிழ் உன் தாய்.. பிழை செய்தாலும் பொறுப்பாள் ...
எழுது அவளை கணினியிலோ அல்லது கவிதையிலோ...

உணர்வுகள் அவசியம் கவிதைக்கு.. உணர்ந்ததை
வரிக்குள் ஊசி போல செலுத்து, செம்மைப்படும் உன் கவி...

மொழியோ வார்த்தைகளே வேண்டாத ஒரு சில கவிதைகள்
எண்ணியதுண்டோ எப்போதேனும்.. கீழே பார் சிதறியதில் சில....

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் எதுவும் வேண்டாம்..

குழந்தையின் சிரிப்பு, ஒரு கூடை நிறைய பூக்கள்
கிழவியின் கனிவு, மழைக்குமுன் சில நொடிகள்...

யானையின் அசைவு, ரயிலின் கடப்பு
மார்கழி காலைக் குளிர், மனைவியின் அரவணைப்பு...

காதலியின் முத்தம், கடல் அலையின் சத்தம்
பிரிந்து சேர்ந்த தாய் சேயின் அழுகை..

வருஷக் காலண்டரின் காகிதப் படபடப்பு..
வரிக்குதிரையின் நிறம், வாரி சுற்றிய பெண்ணின் முடி..

குழந்தையின் கையில் காற்றாடி, கிழவனின் பொக்கை வாய் சிரிப்பு..
வறுமையிலும் சொந்தங்களோடு நடைபாதைக் குடும்பம்...

வா, உணர், வந்து எழுது, பேனாவில் தமிழ் மை நிரப்பு...
வெளியே கொட்டும் வரிகளும் கோடும் கவிதைகளாகட்டும் ...

முயன்று பார்...முடியும் உன்னால்... வா இங்கே
உட்கார்… ஒன்றாய்ச் சேர்ந்து கவி எழுதுவோம்...

:::நாகராஜன்:::

13 பிப்., 2008

காணாமல் போனவன்...::::நாகராஜன்::::


காணாமல் போனவன்...



பெத்த மனசு பதறுதய்யா...பாவி
மகனெக் பார்க்கலியே.....

கஞ்சி குடிச்சியோ கால்வயிறு ரொப்பினயோ. ..
பொலம்பறேனே நா இங்கே வெறுஞ்சிறுக்கி ...

உறியிலே காசு களவாண்டப்போ
நீதான் எடுத்தேன்னு நினைக்கலையே ....

அருக்காணி நெக்லசை எடுத்தது நீயாம் ..
அம்பல பூட்டையும் உடைச்சதும் நீயாம்...

ஆரோ சொன்னப்ப உடம்பெல்லாம் பதறிச்சு...
போலிசு பிடிச்சப்போ உசிரே பூடிச்சு..

வெலங்கேல்லாம் பூட்டிட்டு புடிச்சிட்டு போனானாம்..
வழியெல்லாம் உன்ன உதைச்சிட்டே போனானாம்...

பெத்த மனசு பதறுதய்யா... களவாணிப்பய
குடியிருந்த கருவும் கதறுதய்யா....

என்ன கொற வச்சோமையா நாங்க ஒனக்கு...
பஞ்சத்தைக்கூட வைக்கலயே பங்கு ஒனக்கு...

போலிசு ஜெயிலிலே தப்பிச்சு போனயாமே ...
போட்டாவெல்லாம் பேப்பர்ல வந்துச்சாமே ...

பெத்த மனசு பதறுதய்யா... உன் பேரக்கேட்டா
உடம்பெல்லாம் நடுங்குதய்யா ...

பூட்டு சூட்டு போட்ட போலிஸய்யா...
நல்லாத்தான் நான் வளத்தேன் எம்புள்ளய்ய...

கண்டா சுடசொல்லி உத்தரவாமே?
கலக்டர் ஐயா சொன்னாலும் நடக்காதாமே?

பொலம்பினாலும் மனசு ஆறலியே..
பாவிப்பய புத்தி மாறலியே...

பெத்தவ மனசு பதறுதய்யா...அம்மாவா
கோரிக்கை ஒன்னு கேக்கிறேன்யா..

சுட்டாக்க என்கிட்டே சொல்லாதீங்க...எங்காச்சும்
சொகமாத்தேன் இருக்கான்னு நெனச்சிப் போறேன்..

::::நாகராஜன்::::

10 பிப்., 2008

பிச்சைக்காரன்....:::நாகராஜன்:::

பிச்சைக்காரன்... நன்றி - புகைப்பட உதவி
- ஹென்றி டிசில்வா
அபுதாபி
http://www.henrydsilva.com/


ஏந்திப்பிழைப்பவன் நீயென்றால் ...
எந்தப் பிழைப்பில் பின் நாங்கள்?

வானுக்கும் பூமிக்கும் நடுவில் உன் வாசம்..
வாழ்க்கையோடு வெகுதூரம் உன் நேசம்...

வர்ணமடித்த கூரைக்குக் கீழும் பளிங்கு
தரைக்கு மேலும் நான் வாழும் கூடு...

வாங்கிய கட்டிலில் உறக்கம் வரவில்லை..
வட்டிக்குப் போய் பின்னே கையில் மிச்சமில்லை..

உன் பாத்திரம் உலோகத்தில் செய்த ஒன்று...
என் பாத்திரம் அளாளுக்குமாய் மாறும் என்றும்..

இல்லாத ஒன்றை கேட்பது பிச்சை என்றால்...
உன்னிடம் மட்டும் கேட்பேன் பிச்சை..

பச்சை வர்ணம் அச்சடித்த காகிதமும் கவலையும்
கட்டுக் கட்டாய் என் வீட்டு பெட்டிக்குள் மட்டும்..

இசையும் அமைதியும் கலையும் வித்தையும்
கட்டுண்டிருப்பது காண்பேன் உன்முன்னம் ..

யாசித்தவனிடமே நான் யாசிக்கிறேன்..
பிச்சை போட்டு பிச்சை கேட்கிறேன் ...

காகிதம் கொடுக்கிறேன் கலையைக்கோடு...
இருப்பதைக் கொடுக்கிறேன் இசையைக்கொடு..

இல்லாததை யாசிப்பது பிச்சை என்றால்...
இங்கு நீ மட்டுமா பிச்சைக்காரன்...

:::நாகராஜன்:::

வாழ்க்கை - முஹம்மது எலியாஸ்

என் வாழ்க்கை எனக்கு
miss ஆகிவிட்டது!
என் காதலி Mrs
ஆகி விட்டாள்!!
அதுவும் எனக்கே!

காதலுக்கு மரியாதை - முஹம்மது எலியாஸ்

காதலித்தோம்! கருத்தொருமித்தோம்!!
மயிரிழையில் தப்பிப்யது எங்கள் காதல்!!
மணங்கோண்டோம் நாங்கள்!!
வெவ்வேறு நபர்களுக்கு!!

தையல்காரன் :::நாகராஜன்:::

வேலை வெட்டி செய்ய வேண்டி
வெட்டி வேலை செய்பவன்....

காலச் சக்கரம் சுற்ற வேண்டி
காலால் சக்கரம் சுற்றுபவன்...

பாக்கெட்டிலும் கை வைப்பான்
ஜாக்கெட்டிலும் கை வைப்பான்...

ராமன் இவன்தானோ...
இன்று போய் நாளை வா என்பானே...

அருகில் உதவியாய் அங்கு(ஸ்தான்) தைப்பானை
அங்கு (உ)தைப்பானே...

பழைய துணி தைக்கான்! மழைக்காலத்தில்
அல்லது புதிய துணி இல்லாதபோது..

இவன் பெண் உடுத்தும் துணிகள் எல்லாம்
ஊரான் வீட்டு துணியின் மிச்சம்....

தையல்காரன் புதுத்துணி உடுத்தியதை
நீவிர் எங்கேனும் பார்த்ததுண்டோ?

தீபாவளியோ பொங்கலோ கிறிஸ்துமஸ் இல்லை
ரம்ஜானோ இவன் உறங்கியதாய் நினைவில்லை...

ஏற்ற தாழ்வு தையல்காரனிலும் உண்டன்றோ?
கடை வைத்தவன் மற்றவன் கையில் சுமப்பவன்..

ஆயத்த ஆடை வந்தபின் வேலை வெட்டி
ஏதும் இன்றி வெட்டி வேலை ஆனதே....

அடுத்த முறை ஆயத்த ஆடை வாங்கும்போது
இக்கவிதை உனக்குள்ளே எட்டிப்பார்க்கும்...

முடிந்தால் உதவி செய்! ஒரு துணியேனும்
தைக்கக்கொடு ஒரு வேளை சோற்றுக்காய்...

::::நாகராஜன்:::

மு. மேத்தா & ஷபிர் அஹ்மத்

காதலியிடம்!
மௌனம் உலகத்தில்
சிறந்த மொழிதான்
இருந்தாலும்
இன்னொரு மொழியை
தெரிந்து கொள்வதில்
என்ன தவறு?
ஏதேனும் பேசு!

-மு. மேத்தா

மனைவியிடம்!
உன் பேச்சைக்
கேட்ட பின் புரிந்தது.
மௌனம் எவ்வளவு
அழகு என்று!
கொஞ்சம் நிறுத்து!

-ஷபிர் அஹ்மத்

படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்

படித்ததில் பிடித்தது


திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.

கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.

காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.

கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்

சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.

படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்

படித்ததில் பிடித்தது

திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.

மனைவி ::::நாகராஜன்::::

பெண்ணென்றால் பேயென்று சொல்லிச்
சென்றவன் ஒரு சித்தனோ இல்லை புத்தனோ...

அற்றது பற்றென்றால் உற்றது வீடென்றார்..
புத்தா... விட்டுச்சென்றவளை வீண்டும் நினைத்தாயோ?

எதை எண்ணி உன்னோடு வந்தாள்?
எதைக்கொண்டு அவள் நிறைவெய்தினாள்?

படுக்கையை பகிர்ந்தாள், பின்னே உண்டாள்..
உன் பிள்ளையை பெற்றாள், உன் சுகம் தன் சுகம் என்றாளே...

வறுமை வந்தபோதும் வழக்கு விரட்டும் போதும்
நீண்டது அவள் கைதானே.. வளையல் போய் விஞ்சியது வெறுமை..

அம்மை போட்டபோதும் காமாலை கண்டபோதும்
உடல் மெலிந்ததும் எடை குறைந்ததும் அவள்தானே..

எத்தனை தந்தைக்குத் தெரியும் தன் மகன் தேவைகள்?
தேவைகளை செய்வித்து வாழ்க்கை சக்கரம் உருட்டியதவள்தனே..

ஒரு பண்டிகையின் முதல் நாளிரவு அவள் உறங்கினாளா?
உறங்காத குழந்தையைத்தான் உதறினாளா?

பேருந்தில் தெரியாதவன் கால் மிதித்தாலும்
மன்னிப்புக் கேட்கும் ஆண் வர்க்கமே..

ஒரு முறையாவது அவள் பணிவிடைக்கு நீ
மனப்பூர்வமாய் நன்றி சொன்னதுண்டா?

சில நேரம் நமக்குப் புரிவதில்லை
அருகில் உள்ள நம் சொத்துக்கள்...

அது மனைவியையும் சேர்த்துத்தான்...
புரியும்போது அவள் நம்மருகில் இருப்பதில்லை...

ஒரு நாள் அவள் அருகில் உட்கார்... அவள் செய்த
நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்..

பின் புரியும் உனக்கு நீ அடைந்த பெண்ணால்
எத்தனை பாக்கியம் உனக்கு என்று...

:::நாகராஜன்:::

வாத்தி... ::::நாகராஜன்::::

அய்யாசாமிக்கும் அருக்காணி சிறுக்கிக்கும்
அருமைப்பிள்ளையாம் வெள்ளையப்பன்...

அரை திரௌசெர் போட்டு அனுப்பி வைத்தார்
அடுத்த தெருவில் அரைப்பள்ளிக்கூடம் ....

மூக்கொழுகும் வெள்ளையப்பனை பிடிக்கவில்லை வாத்திக்கு...
மூலையில் அமர்த்தி முட்டிபோட வைத்தான் நாள் பாதிக்கு...

முன்சீப்பு பிள்ளைக்கும் கர்ணம் பொண்ணு காமாட்சிக்கும்
முன்சீட்டு எதுக்கென்று கேட்கவில்லை வெள்ளையப்பன்...

முன்சீப்பு பிள்ளை வரவில்லைஎன்றாலும் பிரெசென்ட் தான்..
வீட்டுப்பாடம் பண்ணினாலும் வெள்ளையப்பனுக்கு முட்டிதான்...

சந்தேகம் தீர்க்க யாரும் இல்லை அருகிலேயும்..
கர்ணம் போல ட்யூஷன் வைக்க வக்குமில்லை...

அந்த வருஷமே முடிந்தது வெள்ளையப்பன் படிப்பு..
அப்பா சொன்னது போல எருமை ஓட்டமட்டும் லாயக்கு..

கிழிந்த டவுசரும் கையில் ஏருமாய் மாறிப்போச்சு வாழ்க்கை..
பட்டணத்திற்கு படிக்கப்போனது முன்சீட்டு பிள்ளைகள் ...

கல்லூரிக்குப்போன பிள்ளைகள் காதலித்து ஓட..
ஊரே சிரித்தது முன்சீப்பையும் கர்ணத்தையும்...

முன்சீப்பு பிள்ளை கம்ப்யூட்டர் படித்து அமெரிக்கா வேலை..
காமாட்சிக்கு யோகம் ஒரு பிரசவத்தில் இரட்டை பிள்ளை...

வெள்ளையப்பனுக்கு தெரியாது அமெரிக்கா பற்றி..
நாட்டமை விளக்கியபோது விழுந்தது வாய் எச்சி ...

கொள்ளிபோட யாருமின்றி வாய் பிளந்தார் வாத்தி..
ஊர் கூடி யோசித்தது பிணம் எரிப்பது பற்றி...

முடிவானது வெள்ளையப்பந்தான் கொள்ளிபோடணுமாம்..
ஏனென்றால் தன் பிள்ளைபோல வளர்த்தானாம் வாத்தி...

:::நாகராஜன்:::

18 ஜன., 2008

சென்னை என்னும் மாநகரம்....:::நாகராஜன்:::

விலைகொடுத்து வாங்கலின்றி வேறேதும் இல்லை
வியர்வைக்கு எந்நேரமும் பஞ்சமில்லை...

தெருவெல்லாம் ஜனக் கூட்டம்...
சந்து பொந்தெல்லாம் மூத்திர நாற்றம்...

கூவம் என்னும் பெருநகர் பேரோடை
நடைபதைக்குள் புகும் நகரப்பேருந்து...

அழுகின காய்க்கு ஜாம் பஜாரோ பாண்டி பஜாரோ..
ஆப்பம் பாயாவிற்கு தள்ளுவண்டி கையேந்திபவன்...

ஒழுங்கு வரிசையில் டாஸ்மாக்கில் மக்கள்
நெரிசலிலும் நகைவாங்கும் உஸ்மான் ரோட்டில் நங்கைகள்...

ஹார்ன் அடித்து அதிரவைக்கும் டூ வீலர்கள்
படிக்கட்டுத் தேய தார் ரோடு கீரலிட்டு பல்லவன் பஸ்...

புகுந்து புயலாய்ப் போகும் ஆட்டோ ரிக்க்ஷா ...
புகைக்குள் புதைந்த வீதிகள் தந்தது கண்ணெரிச்சல் மட்டும்...

வெளிநாட்டு சாமானை இன்னும் வாங்கும் பர்மா பஜார்
தேங்கியதை தலையில் கட்டும் நடைபாதை வியாபாரி....

தேடிச்சென்று காற்று வாங்கும் கடற்கரை கூட்டம்
திருட்டுக் கொடுத்து திரும்பி வர ரயில் வண்டி...

காணாமல் போய் திரும்பி வரும் கண்ணகி சிலைகள்
அடுத்த தலைவனுக்கு காத்திருக்கும் சமாதி வரிசை...

கெட்டும் பட்டினம் சேர்வதா இல்லை
கெட்டுப்போன பட்டினம் சேர்வதா?

ஒரு நாள் பயணத்தில் போதுமடா சாமி பட்டினம் ...
பிச்சை எடுத்தாலும் பரதேசம் பரதேசம்தான்....

::::நாகராஜன்::::

துணுக்குக் கவிதைகள் -ஷபீர் அஹ்மத்

சென்னை கடற்கரையில் ...

பிசசை கேட்டசிறுவனுக்கு ஒரு ரூபாய்மறுப்பு!
சுண்டல்காரனுக்குக்கொடுக்கும் போது
பறந்தே போயிற்றுபத்து ரூபாய் நோட்டு!!


மும்பை பஸ்ஸில்...

கர்ப்பவதிக்குஉட்கார இடம் இல்லயா?
கொடுத்துவிட்டுக் கேட்டேன்.
எத்தனை மாதம்?
அரை மணி நேரம்!

துபாய் ரோட்டில்....

நடந்து கொண்டிருந்த நண்பனை
காரிலிருந்து அழைத்தேன்.
வா. உனை drop செய்கிறேன்.
வேண்டாம்நான்
அவசரமாபோகணும்!

17 ஜன., 2008

காரணம்: :::::நாகராஜன்::::

சுடலை மாடனுக்கு நேர்ச்சையோ அல்லது
சூப்பர் ஸ்டாரின் புதுப்பட வெளியிடோ....

அப்பாவின் வசவுகளோ அல்லது
பரிட்சையில் பாஸோ பெயிலோ...

தலைவன் செத்ததோ அல்லது
தனியாகிப் போனதோ...

நண்பனுக்குக் கல்யாணமோ அல்லது
நீலாவிற்கு புனித நீராட்டலோ...

விடுமுறைக்கு வந்த விருந்தாளியோ அல்லது
வியாபாரத்தில் வந்த நஷ்டமோ...

காதலில் தோல்வியோ அல்லது
கட்டியவள் செய்யும் கொடுமையோ...

கிராமத்தில் திருவிழாவோ அல்லது
லாட்டரியில் அடித்த ஆயிரம் ரூபாயோ...

புதிய வீடு காட்டியதோ அல்லது
புதுக்குடித்தனம் போனதோ...

ஆயிரம் இருக்கு காரணங்கள்
சேர்ந்து நாம் சாராயம் குடிக்க.....

எந்தக் காரணமும் இல்லையென்றாலும்
இருக்கவே இருக்கு காரணமில்லாமை....

:::::நாகராஜன்::::

ஜார்ஜ் புஷ் வருகை: ஷபீர் அஹ்மத்

ஏகாதிபத்தியத்துக்கு
ஏகப்பட்ட வரவேற்பு இங்கே!

வெள்ளை மேனியில் மறைந்திருக்கும்கருப்பு
இதயத்துக்குசிவப்புக்கம்பளவிரிப்பு!

தீவிரவாதத்தைவிதைத்துவிட்டு
ஜனநாயகஅறுவடைகேட்கிறார்

ஆயுதங்களைஅனைவருக்கும்
விற்றுவிட்டுஅமைதி காப்பீர்
என்றுஅறிவுரைக்கிறார்

நீங்கள் என்நண்பர்கள்!
உங்கள் முதல்எதிரி
என் மூத்தநண்பன்!

அடிக்கும்அவனுக்கு
ஆயுதங்கள்பரிசு!காயம் பட்ட
உங்களுக்குஆலிவ் சிறகு!

சற்றுசிந்தியுங்கள்பெரியவரே!

உங்கள்நாட்டின்வயதை
விடஅதிக காலம்
அமைதிகாத்தபூமி இது!

இன்றைய நிலைமைஉங்களின்
எண்ணெய்தேவைக்கு
அப்பாவிகள்தரும்ரத்த விலை!

பயங்கரவாதத்தைமரபணு
சோதனைசெய்தால்கடைசியில்கிடைப்பது
உங்கள் பெயராகத்தான்இருக்கும்.

வல்லவர்களாய்இருங்கள்!
கொஞ்சம்நல்லவர்களாய்
இருக்கமுயலுங்கள்!

- ஷபீர் அஹ்மத்

காதலுக்கு மரியாதை: முஹம்மது எலியாஸ்

காதலுக்கு மரியாதை:

காதலித்தோம்! கருத்தொருமித்தோம்!!
மயிரிழையில் தப்பிப்யது எங்கள் காதல்!!
மணங்கோண்டோம் நாங்கள்!!
வெவ்வேறு நபர்களுக்கு!!

- முஹம்மது எலியாஸ்

16 ஜன., 2008

மண் மணம் மாறா விளையாட்டுக்கள்....:::::நாகராஜன்::::

எப்படித் தொடங்கியது என்று தெரியவில்லை
சிறுவயதில் தெரு ஓர விளையாட்டுகள்....

புதியதாகக் குடி பெயர்ந்தாலும் சட்டென்று
சேர்ந்து கொள்வது விளையாட்டில்தான்....

நல்ல நண்பனை அடையாளம் காட்டுவதும்
தெரு ஓர விளையாட்டில்தான் . ...

சில நாள் கோலி, சில நாள் பந்து எறி
கிட்டிப்புள், சில நாள் பம்பரம் ...

வெளியே வர முடியாத மழை நாட்களில்
கண்ணாமூச்சியோ அல்லது வார்த்தை விளையாட்டோ ....

கேலிக்கும் கிண்டலுக்கும் உதை அடிக்கும்
குறைவில்லை தெரு ஓர விளையாட்டில்...

பருவம் போல், மாறியது எப்படி
ஒரு விளையாட்டிலிருந்து மற்றொன்றிற்கு...

கிட்டிப்புள் பருவம் என்றால் போதும்
கிளைகளைத் தொலைக்கும் சில மரங்கள்...

பம்பரக் காலம் என்றால் மறக்கும் வீட்டுப்பாடம்
பிரம்படி முதுகில் இனிமையாய் வலிக்கிறது இன்றும் ...

திடீரென்றுத் தோன்றும் யாரோ ஒருத்தனுக்கு
கிரிக்கெட் என்னும் உன்னத விளையாட்டு....

தோணும் இடத்திலெல்லாம் குச்சி நட்டு
குறி பார்த்துக் குதிக்காத பந்தெறிந்து ..

வீதியில் போனவரை காயப்படுத்தி வேண்டாத
அயல்வாசியின் சன்னல் உடைத்து.....

எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா....
ஒலிம்பிக் ஈடுண்டோ இதற்க்கு?

கல் முளைத்த காடுகளில், நகரத்தின் நெருக்கமான குடித்தனங்களுக்கிடையில்...

டிவி கிரிக்கெட் பார்க்கும் என் மகன் ஒருநாள்...
கேட்டான் கிட்டிப்புள் என்றால் என்ன என்று....

அவன் இழந்த அனுபவத்தை விளக்க முடியாமல்
ஒரு நாள் முழுவதும் மனம் வலித்தது எனக்கு...

::::நாகராஜன்::::

15 ஜன., 2008

அண்ணன்! :::::நாகராஜன்::::

அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...

ஒரே ஸ்கூல் அடுத்தடுத்த வகுப்பறை
ஆசிரியன் அவனை அடித்தால்
வலித்தது எனக்கு

இருவருக்கும் பொதுவாய் நண்பர்கள்...
இருந்தபோதும் இருவரின் ரகஸியங்களும்
மறைமுகமாகவே இருந்தன...

அவன் சிகரட் பிடித்ததும்
கூடப் படித்தவளுக்கு கடுதாசி கொடுத்ததும்
எனக்குத் தெரியாதென்று அவன் நினைப்பு....

விடுமுறை நாட்களில் என்னை
வலுக்கட்டாயமாய் வயல் வெளி கிணற்றில்
தள்ளி நீச்சல் பழகிக் கொடுத்ததும்....

எதிர் வீட்டுப்பையன் சைக்கிள் விடுவதை
ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்
பழகிக் கொடுத்ததும் .....

விளையாட்டில் கூட இருந்தவன்
என்னை அடிப்பதைப பார்த்து வரிந்து கட்டி
அவனை சுற்றி சுற்றி அடித்ததும்....

பரிட்சையில் காப்பி அடித்ததால்
தலைமை ஆசிரியன் அண்ணனுக்கு டிசி கொடுத்ததை
அப்பாவிடம் மறைக்கச் சொல்லி மன்றாடியதும்....

ஒரு மழை நாளில் விதி முறை எல்லாம்
மாறியது போல அண்ணனை அப்பா தன்
பட்டறைக்கு உதவியாளனாக மாற்றியதும்...

அண்ணன் எனக்கு அன்னியனாகி
போனது அன்றுதான்....
அப்பாவின் காலத்திற்குப்பின் அண்ணன்
எனக்கு அப்பாவானான்.....

நான் பொறியியல் படித்து முடித்தபோது
நான் அறியாதது அண்ணனுக்கு
என்னால் ஏற்பட்ட கடன்கள்....

வேலைக்காக வெளிநாடு சென்ற
எனக்கு எப்படி எல்லாம் மறந்து போனது?

நான், என் சேமிப்பு என் சொத்து என் மனைவி
என் பிள்ளைகள் என்று எப்படி
என்னால் இருக்க முடிந்தது?

அண்ணன் எனக்கு இத்தனை நாள்
சொல்லாதது எல்லாம் ஒரே நாளில்
தெரிந்த போதுநான் உடைந்து போனேன்.....

அண்ணன் வழக்கில் பாதி விட்டதும்
மீதி வியாபாரத்தில் நஷ்டப்பட்டதும்
எப்படி எனக்குத் தெரியாமல் போனது....
என்ன ஆனது எனக்கு வெளிநாட்டில்?

அண்ணன் ஒரு நாள் தொலைபேசியில்
பேசினபோது குரலில் தெரிந்த
தன்மான்க்குறைவு என்னை
அடித்துப்பர்த்ததே?

அண்ணன் என் நண்பன்
அண்ணன் என் கடவுள்
அண்ணன் என் எல்லாம்
என்றபோதும் .....

என்னிடம் எல்லா வசதியும்
பணமும் இருந்தபோதும்

என் மனைவி அண்ணனுக்கு
கடன் கொடுக்காதே என்றபோது
என்னால் என் அவளை எதிர்த்துப்
பேச முடியாது போனதேன் ??

:::::நாகராஜன்::::

பொங்கலோ பொங்கல் :::::நாகராஜன்::::

ஆடி மாசம் பட்டம் விட்டோம்
விதைத்த நெல்லில் மரபணு மாற்றம்.....
முளைவிட்ட மூன்றாம் நாளில்
மரணத்தை மிதித்தது ....

மானம் பார்த்த விவசாயிக்கு
மான்யமில்லை ஆனால் பொழுது போக்க
மற்றவற்க்கு சும்மா கிடைத்தது
தொலைக்காட்சிப்பெட்டி

கல்லூரிக்கு பணம் கட்ட வக்கில்லை
வாலில் சடை பின்னி அழகு பார்த்த
வெள்ளைப்பசு கடைசிப் பெண்
அழ அழ அடிமாடாய்ப்போனது ....

மானம் பொய்த்தப்பின் மரியாதை போனது
வாங்கிய கடனுக்கு வட்டியாக
வங்கிக்குப்போனது வீட்டுப்பத்திரம்
தோட்டத்தில் மிஞ்சியது சாண நாற்றம்

முளைத்த நெல்லும் தண்ணீரின்றி வாடிப்போனது
வெட்டியெடுத்து விற்கலாம் என்றால்
வீதியெல்லாம் அனைவரின்
புல் மூட்டைகள்

கல்யாண வயதில் வீட்டில் ஒரு பெண்
கையாலாகாத தகப்பனைப் புரிந்து
தையல்காரனோடு ஓடிப்போனது
மழையின் தவறா?

கரும்பும் மஞ்சளும் கதையாகிப்போய்
கலிகாலத்தில் புயலடிக்கும் ஒரு தையில்
யாரோ சொன்னார் நாளை
பொங்கல் என்று....

தமிழன் நாகரிகம்.... பண்பாடு....
சோற்றுக்கு பஞ்சம் என்றாலும்
வாழ்த்துக்கு பஞ்சமில்லை

இஞ்சியின்றி கன்றுமின்றி
மாடுஇன்றி மஞ்சளின்றி
பரத்திப்போட்ட ஈரத்துணியின்
மறைப்பும் தாங்காமல்

பசியின் வெப்பத்தோடு
தமிழன் வயிறு
வேகமாய் வாழ்த்தியது
பொங்கலோ பொங்கல் என்று .....

:::::நாகராஜன்::::

அம்மா என்னும் அழகான கவிதை....:::::நாகராஜன்::::

அம்மா என் தேவதை....
அம்மா என் தெய்வம்....

அம்மா இல்லாதபோதுதான்
அவள் அருமை புரிந்தது.......

எத்தனை பொய்கள் நீசொன்னாலும்
அத்தனையும் கவிதை எனக்கு.....

வயிற்றில் இருந்து உதைத்தபோது
வலி பொறுத்து சிரித்தாயே அதுவா....

எவ்வித விஞ்ஞான அறிவுமின்றி
அப்பாவின் ஜாடை பிள்ளை என்றாயே அதுவா....

எத்தனையோ ராத்திரிகள் என்னை தூங்கச்செய்ய
நீ தூக்கம் தொலைத்தாயே அதுவா?

பால்குடி மறக்காமல் பிராயம் ஐந்து வரை
மார்பை கடித்த பொது பொறுத்துக்கொண்டாயே அதுவா?

அடுத்த வீடுப் பெண்ணுடன் விளையாடினால்
காது அறுந்துவிடும் என்பாயே அதுவா?

என் தேவைக்கு வேண்டும் என்று தெரிந்தே
உரிப்பானைக்குள் காசு ஒளித்து வைப்பாயே அதுவா?

காமாலை வந்தபோது உணவைக்குறை என்றான் வைத்தியன்
ஆனால் உண்ணாமல் உபவாசம் இருந்தது நானல்ல நீ...

அம்மை போட்ட உடல் வேகமாய் குணமாக ஈரத்துடன்
கோவிலில் எனக்காக உருண்டாயே அதுவா?

எந்த ஒரு நாளும் எனக்கு முன் நீ சாப்பிடாததை
சாமர்த்தியமாக மறைப்பாயே அதுவா?

பாடம் படிக்கும் என்னுடன் படிக்காத நீ
சமமாய் உட்கார்ந்து தூக்கம் சொக்குவாயே அதுவா...?

என்ன பட்டம் படிக்கப்போகிறேன் என்று தெரியாமலே
எனக்காக அப்பாவிடம் வாதாடுவாயே அதுவா?

புகை பிடித்த வாய் நாறும் போதும் பொறுத்துக்கொண்டு
என்னை உச்சி முகர்ந்து வழியனுப்புவாயே அதுவா?

வாலிப வயதில் வாழ்க்கை விளையாட்டிற்கு என் ஜோடிக்காக
அப்பாவிடம் அழகாக ஜோடிப்பாயே அதுவா?

எத்தனை இடங்களில் என் சந்தோசம் முக்கியம் என்று
கல்யாணப்பெண் பார்த்திருப்பாய்....

எத்தனை கற்பனைகள் உனக்கு
என்னை விட என் மனைவி பற்றி?

கல்யாணம் ஆனதும் என் முதல் சம்பளம் மனைவியிடம் போனபோது
நான் மிகவும் பொறுப்பென்று பூரித்தாயே?

மனைவி முகம் சுளித்தாள் என்று ஒரே நாளில் தீர்மானித்து
தனிக்குடித்தனம் வைத்தாயே....

அப்பாவின் உடலுக்கு கொள்ளி வைக்கத்தான் கூப்பிட்டாய்
அவரின் ஆஸ்த்மாவுடன் நீ மட்டும்தானே போராடினாய்?

யாருமின்றி தனியானபோது மனைவியின் வெறுப்பையும் மீறி
என்னோடு வந்தபோது சந்தோஷம் எனக்கு...

ஆனால் உன்னுடன் பேச வரும்போது உன்னை சுருக்கி
சமையல் அறையின் உள்ளே எப்போதும் பதுங்குகிறாயே அது ஏன்?

ஒவ்வொரு நாளும் அலுவலகம் போகும்போது விதவை எதிரே வரக்கூடாதென்று அடுப்படியில் ஒளிகின்றாயே அது ஏன்?

ஒருநாள் என் மகன் நடுநிசியில் விழித்து உறக்கம் கெடுத்தபோது என் மனைவியின் மடியில் நான் என்னைப் பார்த்தேன் ...

நீ மட்டும்தான் எனக்கு கடமை செய்திருக்கிறாய்
நான் உனக்கு ஒன்றும் செய்யவில்லையே?....

அம்மா! சுயநலத்தின் முன் கோழையாகிவிட்டேன்
வாழ்க்கை முழுதும் ...
புரிந்த பின் பிழை திருத்த நியில்லை உயிரோடு! ...

அடுத்த பிறவி ஒன்றிருந்தால் உன் தாயாய்
பிறந்து உன் கடன் தீர்ப்பேன்....

என் மனைவிக்கு இது எதுவும் புரியாது ..
உனக்கும் எனக்கும் உள்ள உறவு பற்றி....

ஆனால் ஒருநாள் புரியும் அவளுக்கு
தன் மகன் எழுதிய கவிதை படித்த போது!

:::::நாகராஜன்::::

திருவிழா ::::நாகராஜன்:::

கீற்றுக்கொட்டாய் திரையரங்கில் தோரணம் கட்டி
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்...

ஊர்க்கோடியில் சாராயப் படையல்
விறைப்பாய் இருக்கும் முனியப்ப சாமிக்கு

படையல் முடித்து முட்டக்குடித்த
சாமியாடிகள் அலங்கோலமாய் தரையில்....

ஆணின் கை தொட்டு வளையல் மாட்ட
கை நீட்ட மறுக்கும் கிராமத்துக்கிழவி...

எத்தனை சொல்லியும் அடங்காமல் பலுன் கண்டதும்,
சட்டென்று அழுகையை நிறுத்திடும் குழந்தை...

விரல்களை நக்கும் நான்கு சிறுவர்கள்
கைகளில் கலர் கலராய் மிட்டாய் கடிகாரம்....

புதிதாய் பூப்படைந்த பெண்ணின் முகத்தில்
யாப்பில் அடங்காத கவிதைச் சிரிப்பு...

வர்ணம் வாரித் தெளித்தது போல
வானம் முழுவதும் அக்னி மத்தாப்பூ....

கோவிலின் கொட்டு மேளத்திற்கும்
தலையாட்டும் பூம்பூம் மாடு...

அவள் விற்கும் புகையிலை போல்
வயதான பாட்டியின் முகச் சுருக்கங்கள்...

பிடிவாதமாய் ராட்டினத்தில் சுற்றும்
பிராயம் கடந்த பேரிளம் பெண்...

எம் ஜி ஆர் அட்டைகத்தி கட் அவுட்டுடன்
இவ்வருஷமும் மாறாதகருப்பு வெள்ளை ஸ்டூடியோ...

ஒழுங்கு முறை மாறாமல் ஒவ்வொரு
வருஷமும் எப்படித்தான் முடிகிறதோ...

ஒரு கிராமத்துத் திருவிழாவில்
ஒரே மாதிரி நிகழ்வுகள் ...

::::நாகராஜன்:::

தலைப்பில்லாக் கவிதைகள்: :::::நாகராஜன்::::

கொளுத்திப் போட்டேன் மரத்தின்மேல்
காடு இழந்தது ஒரு மரத்தை.......
கொளுத்திப் போட்டேன் மதத்தின்மேல்
நாடு இழந்தது மனிதத்தை ....
--------------------------------------------------------------
அவள் விற்கும் புகையிலை போல்
கிழவியின் முகத்தில் சுருக்கங்கள்
அத்தனை சுருக்கமும் அனுபவங்கள்....
---------------------------------------------------------------
குறி சொன்னார் சாமியார் எதிர்காலம் பற்றி
கூட இருந்த கைதிகளுக்கு....
--------------------------------------------------------------------
மின்னலுக்கும் வர்ணமுண்டோ?
இல்லை வானத்தில் மத்தாப்பூ...
-------------------------------------------------------------------
அரசியலுக்கு வர விருப்பமில்லை
தொலைக்காட்சியில் துண்டு காட்சியில்
தலை காட்டும் வரை ....
--------------------------------------------------------------------
வித விதமாய் துணிவகைகள்
நெய்தது கைத்தறி இயந்திரம்
கோவணத்துடன் நெசவாளி
--------------------------------------------------------------------
செட்டியார் ஒரு நாள் செத்துப்போனார்
வாய்க்கரிசி ரேஷன் கடையிலிருந்து....
--------------------------------------------------------------------
இருந்தவரை கவனிக்கவில்லை....
சுவற்றில் மாலை போட்டு மாட்டியாச்சு
அப்பாவின் நினைவுகளை.....
-------------------------------------------------------------------
யாரும் சொல்லித்தரவில்லை.....
சுபாவம்தான் அது சுவற்றில் சிறுநீர் கழிக்க நாய்க்கு....
-------------------------------------------------------------------
ஒரு வாய் தேநீருக்கு மருமகளிடம்
தெரிவிக்கத் தவித்தபோது புரிந்தது
இறந்துபோன மனைவியின் அருமை.......
--------------------------------------------------------------------
சட்டையில் கைவிட்டு திருடியபோதும்
தோன்றவில்லை அழுவதற்கு...
அப்பாவின் தேய்ந்த விரலிடையில்
மசிக்கரை காணும் வரை.......
-------------------------------------------------------------------
நான் நானாக இல்லை காதலித்த போது...
நீ நீயாக இல்லை கல்யாணமான பின்பு....
-------------------------------------------------------------------