மொத்தப் பக்கக்காட்சிகள்

20 மார்., 2012

முதல் பரிசு..

அப்பன் இல்லாப் பிள்ளை ...
பிள்ளை இல்லா அப்பன்...

தாயில்லை மகளில்லை..
தம்பியில்லை அண்ணனில்லை ..

தமக்கையில்லை தங்கையில்லை
மாமனில்லை மச்சானில்லை....

ஊர் முழுதும் பிணவாசம்
ஊர்ந்து போகும் வெடி வாசம்...

உடுதுணியின்றி ஒருபெண்
அம்மணப் பிணமாய் கிடக்க....

பார்க்க சகிக்காத அப்பன் ...
அவன் பிணமோ அடுத்த பக்கம்...

இனப்படுகொலையில்
இதற்கல்லவோ முதல் பரிசு...

உயிர் பிழைத்த ஒற்றை தமிழன்
வெறுப்பில் கேட்டான்.....

நானும் செத்தால் உன் ஊர்
அரசியல் நடக்குமா என்று...

காதலித்தோம் ....

ஹைக்கூ..

காதலித்தோம்
கண்டபடி சுற்றினோம்..
கைபிடித்தோம் நீ ஒருவனை..
நான் ஒருவளை..
ஹைக்கூ..

கண்டம் விட்ட பறவைக்கு
பழைய இடம் மறந்தது..
அற்றிய குளம்
அறுநீரானதால்..

பூ...

ஹைக்கூ..

கூடை நிறைய பூ...
விற்பனைக்காய்...
விதவையின் தலையில்...

கூடை பிணங்கள் குப்பையிலே ....


கூடை பிணங்கள் குப்பையிலே ....





கூடை உடல்கள் குவிந்து இங்கே
குப்பை மேட்டில் கிடக்குது.....

காய் கறிக்கு பதிலாக
கறி கால் கை கிடைக்குது.....

ஈழம் ஆண்ட சோழனுக்கு
ஈரக்குலைகள் சமர்ப்பணம்...

பசியெடுத்த சிங்களனுக்கு
தமிழன் பிணத்தால் தர்ப்பணம்...

வீரத்தமிழன் என்கிறாயே...
வெட்கமில்லை உங்களுக்கு?

வெட்டித்தின்னும் சிங்களனை
தட்டிக் கேட்கத் தங்களுக்கு?

மந்திரி பதவி கேட்க மட்டும்
விமானம் ஏறிப்போகிறாய்..

மாண்ட தமிழன் மானத்தை
மறந்துதானே போகிறாய்....

உண்ணா விரதம் என்றுரைத்து
ஊர் வாயை மூடுகிறாய்...

வேஷம் களைந்து விலகினால்
பார்ப்பனர் சூழ்ச்சி என்கிறாய்...

அரசியல் கட்சி எல்லோர்க்கும்
தமிழன் பிணத்தில் ஓட்டு வேட்டை....

பச்சை சட்டை போட்டு கிட்டா
போராளி தமிழன் ஆவாயா?

மிலிடரி சட்டை போட்டுக்கிட்டு..
போஸ் கொடுத்து போவாயா?

பதவி பிடிக்க உங்களுக்கு
தமிழன் பிணங்கள் போதுமே...

தின்னு பாருங்கள் தமிழன்
கறியை...வீரமாவது வரட்டுமே...

:::பா. நாகராஜன்:::::