மொத்தப் பக்கக்காட்சிகள்

20 மார்., 2012

முதல் பரிசு..

அப்பன் இல்லாப் பிள்ளை ...
பிள்ளை இல்லா அப்பன்...

தாயில்லை மகளில்லை..
தம்பியில்லை அண்ணனில்லை ..

தமக்கையில்லை தங்கையில்லை
மாமனில்லை மச்சானில்லை....

ஊர் முழுதும் பிணவாசம்
ஊர்ந்து போகும் வெடி வாசம்...

உடுதுணியின்றி ஒருபெண்
அம்மணப் பிணமாய் கிடக்க....

பார்க்க சகிக்காத அப்பன் ...
அவன் பிணமோ அடுத்த பக்கம்...

இனப்படுகொலையில்
இதற்கல்லவோ முதல் பரிசு...

உயிர் பிழைத்த ஒற்றை தமிழன்
வெறுப்பில் கேட்டான்.....

நானும் செத்தால் உன் ஊர்
அரசியல் நடக்குமா என்று...

காதலித்தோம் ....

ஹைக்கூ..

காதலித்தோம்
கண்டபடி சுற்றினோம்..
கைபிடித்தோம் நீ ஒருவனை..
நான் ஒருவளை..
ஹைக்கூ..

கண்டம் விட்ட பறவைக்கு
பழைய இடம் மறந்தது..
அற்றிய குளம்
அறுநீரானதால்..

பூ...

ஹைக்கூ..

கூடை நிறைய பூ...
விற்பனைக்காய்...
விதவையின் தலையில்...

கூடை பிணங்கள் குப்பையிலே ....


கூடை பிணங்கள் குப்பையிலே ....





கூடை உடல்கள் குவிந்து இங்கே
குப்பை மேட்டில் கிடக்குது.....

காய் கறிக்கு பதிலாக
கறி கால் கை கிடைக்குது.....

ஈழம் ஆண்ட சோழனுக்கு
ஈரக்குலைகள் சமர்ப்பணம்...

பசியெடுத்த சிங்களனுக்கு
தமிழன் பிணத்தால் தர்ப்பணம்...

வீரத்தமிழன் என்கிறாயே...
வெட்கமில்லை உங்களுக்கு?

வெட்டித்தின்னும் சிங்களனை
தட்டிக் கேட்கத் தங்களுக்கு?

மந்திரி பதவி கேட்க மட்டும்
விமானம் ஏறிப்போகிறாய்..

மாண்ட தமிழன் மானத்தை
மறந்துதானே போகிறாய்....

உண்ணா விரதம் என்றுரைத்து
ஊர் வாயை மூடுகிறாய்...

வேஷம் களைந்து விலகினால்
பார்ப்பனர் சூழ்ச்சி என்கிறாய்...

அரசியல் கட்சி எல்லோர்க்கும்
தமிழன் பிணத்தில் ஓட்டு வேட்டை....

பச்சை சட்டை போட்டு கிட்டா
போராளி தமிழன் ஆவாயா?

மிலிடரி சட்டை போட்டுக்கிட்டு..
போஸ் கொடுத்து போவாயா?

பதவி பிடிக்க உங்களுக்கு
தமிழன் பிணங்கள் போதுமே...

தின்னு பாருங்கள் தமிழன்
கறியை...வீரமாவது வரட்டுமே...

:::பா. நாகராஜன்:::::


16 மார்., 2012

அரசியலும் மக்களும்



திரிவேதி கொளுத்தியது
தீவண்டியின் திரியை
தீதீ கொளுத்தியது
திரிவேதியின் திரியை..

பிராண வாயு குறைந்து
பிரணாப் முகர்ஜி
மௌனமாய் நம்
மன்மோகன் சிங்...

ரேபரலி உதைத்ததில்
ராகுலுக்கு ரணம்...
ராபர்ட் வதேராவிற்கோ
அரசியல் பண்ணாதே கோ கோ ..

மாயாவதிக்கு இனி
பொழுது போக மாலையில்
உள்ள பணத்தை எண்ணலாம்
அல்லது சிலைகளை எண்ணலாம்....

நல்லா இருக்கப்பா நியாயம்..
கட்டிடம் மாற்றினால்
கலைஞர் தற்கொலை செய்வராம்..
தமிழன் செத்தால் உலக அரசியலாம்.....

கரை வேட்டிகளுக்கு இனி
ஒரு வார இலங்கைத் தீனி
மீண்டும் எடியுரப்பா
கொடியை பிடியப்பா...

சூப்பர் ஸ்டார் படையப்பா
இப்ப நம்ம ஊரு பாட்டுக்காரன்..
தினத்தந்தி இப்ப சர்குலேசன்ல
முந்திக்கிச்சாம் ....

கைய தட்டுங்க பாக்கலாம்..
சூரிய சக்தியில் மின்சாரமாம்
உன் பேரனும் என் பேரனும்
அனுபவிக்கவாம்..

அப்போ நீயும் நானும்
இவங்க கூட வாழணும்னா..
கிழிஞ்சதை கட்டி
குகையில் ஆதிவாசியாய்.....

:::B.Nagarajan:::

15 மார்., 2012

ஹைகூ...

ஹைகூ...

கடிக்காத கொசுவை
அடிக்காது விட்டால்
என்ன?....
மனசாட்சி......

:::பா.நாகராஜன்:::

வீர மகன்


மோத்தலில் உதிர்ந்த
அனிச்ச மலரா
நீ?

ஒரு வீரனின்
விந்தில் வந்ததால்
உனக்கு
இம்முடிவா?

இனி எப்படி நான்
உறங்குவேன்?
கனவிலும் துரத்துமே
உன் கடைசி காட்சி?

பால்குடி மறந்திருக்குமா
உனக்கு? பாட புத்தகம்
சுமந்த உடலிலா
துப்பாக்கி ரவைகள்?

மரணத்தைக் கூட
முன்மார்பில்
வாங்கிய மாவீரன்
நீயல்லவா?

ஐந்து ரவைகளும்
உன் மார்பில்..
புறமுதுகு காட்டாத
போராளியின் மகன்....

எங்கே இருக்கிறாள்
உன் தாய்? கல்லறைகளை
கண்ணீரில்
கழுவிக்கொண்டா?

உன் மரணம் கண்டு
கண்டங்களும்
கண்டனங்கள்
கொடுக்கின்றதே?

கொஞ்ச காலம் முன்
செய்திருந்தால்
நீயாவது
மிச்சமாகியிருப்பாயே?

உன் கபடமற்ற
முகம் மறக்க
இன்னும் எத்தளை
நாள் பிடிக்கும்?...

ஒரு வீரப் பயிரை
நிராயுதபாணியாக்கி
கொன்ற எதிரிகளே
நின்று பாருங்கள்...

இவன் கையில் ஒரு
ஆயுதம் இருந்திருந்தால்
உங்கள் கூட்டமே
அழிந்திருக்கும்....

இவன் ஒருத்தி
மகனல்ல...
எம் இனத்தின்
இலச்சினை...

வீழ்ந்தது இலை
மட்டுமே...
வேர் இன்னும்
உயிர்ப்போடு இருக்கிறது...

இன்னும்
ஆயிரமாயிரம்
வீர விதைகளை
உற்பத்தி செய்தபடி.....

:::Dr. B.Nagarajan::::