சிலேடைக்கவி - பெண்ணும் பூனையும்
அடுப்படி வாசம் பிறாண்டும் குணமுண்டு மெல்ல நடக்கும்
மடியிலிடம் பிடிக்கும் வேண்டுமதற்கு மாற்றுப் பால் - கண்மூடி
நடிக்குமது இருண்டதாய் வீடகன்றுப் போகையில் துர்சகுனமாம்
நன்றாயிருப்பாயா நாகராசா பெண்ணைப் பூனையாக்கியதற்கு . ..
:::நாகராஜன்:::
2 கருத்துகள்:
அன்புள்ள நண்பரே,
மிகவும் அருமையாக உள்ளது. முத்தமிழ் மன்றத்தில் இலக்கியப் பிரிவின்கீழ் சிலேடை என்ற தனித் தலைப்பிட்டு இதுபோல பல சிலேடைகளை தொகுத்து வைத்திருக்கிறோம்.
இணைந்து பயன்பெறுங்கள்.
www.muthamilmantram.com
நண்பர் முருகருக்கு,,,
வலைக்கருகே வந்தவர் எல்லாம் வலையிழுக்கும் என்பதறி
பிடிக்கும் வலை, விடுபட வழியில்லை - பிடிபட்டால் ஊண்
உறக்கமில்லை முருகரிந்தவர் தெளிவார் வாழ்வியல் இதுவென்று
சிலந்தி வலையும் உங்கள் வலையும் ஒன்றே என்பேன்
:::நாகராஜன்:::
கருத்துரையிடுக