மொத்தப் பக்கக்காட்சிகள்

18 பிப்., 2008

சிலேடைக்கவி...:::நாகராஜன்:::

சிலேடைக்கவி - கராமா வாழ் தமிழனின் வாரக்கடைசி காட்சிகள்
(விளக்கம் கீழே)

அப்பாவிற்க்கரிசி வாங்கி அம்மாவிற்கேற்ற பணியாரம் செய்ய
மாவிலையால் மேலிடாள் துளியேனும் உப்புமா மனையில்
மாவுண்டாதலால் தப்பாமல் குடும்பமாய் நிற்கும் வாசலில்
அதிரசம் அக்காவிற்கு போகையில் ...துயரன்றோ துபாய்க்கு...


விளக்கம்
அப்பாவிற்கு - அந்த பாவிற்கு (பாவு என்றால் அளக்கும் படி)
அம்மாவிற்கு - அந்த மாவிற்கு ஏற்ப பணியாரம் செய்ய
மாவிலையால் - மாவு போதவில்லையால்
மேலிடாள் துளியேனும் உப்பு மா மனையில் - சிறு ஊறுகாய் (உப்பு + மாங்காய்) கூட கொடுக்க மாட்டாள் மனைவி
மாவுண்டாதலால் - மா (செல்வம்) இருப்பதால்
தப்பாமல் குடும்பமாய் நிற்கும் வாசலில் - கராமா ஓட்டல் வாசல்களில் வியாழன்
வெள்ளியன்று ராத்திரி மணி பனிரெண்டு வரை
கூட்டமாய் நிற்கும் குடும்பம்.
அதிரசம் - மிகவும் ரசிக்கத்தக்கதாகும் அக்காட்சி
அக்காவிற்கு போகையில் - அந்த ஊர் பக்கம் போகும்போது

:::நாகராஜன்:::


1 கருத்து:

பாச மலர் / Paasa Malar சொன்னது…

உங்கள் கவிதைகள் பலவும் படித்திருக்கிறேன்..மிகவும் அருமை..தங்கு தடையில்லாமல் பிரவகிக்கும் சொற்கள்...தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி இன்னும் பல தளங்களில் இவ்வல்ப்பூவை இணைத்துக் கொண்டால் இன்னும் பலரும் படித்து ரசிக்கக்கூடும்.